பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. தோல்வி என்பது தொடக்கமே! வாழ்க்கையின் நோக்கம் என்பது மகிழ்ச்சியாகும். வாழ்க்கையின் வெற்றி என்பது மகிழ்வோடு வாழ்வதாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருதவர்கள் அனைவரும், தங்களது வாழ்க்கைப் பயணம் தோல்வியடைந்து போன தாகவே கருதிக் கொள்கின் ருர்கள். அந்த முடிவுடனே வாழ் நாளேக் கழிக்கின் ருர்கள். மனதிலே மலரும் அமைதியை அழிக்கின் ருர்கள். தங்கள் வாழ்க்கையையே பழிக்கின்ருர் கள் உடன் இருப்பவர்களையும் சபிக்கிருர்கள் வேறென்ன செய்வது? அதற்கு மேல் அவர்களால் சிந்திக்க முடியவில்லை. சிந்திக்கத்தான் அவர்களது அறிவும் அனுபவமும் உதவு கின்றனவே தவிர, உண்மையான சூழ்நிகலயை சந்திக்க அவர்கள் விரும்புவது மில்லை. மருந்துக்காகக் கூட முயல்வது மில்8ல. நாம் நினைக்கிருேம். அது இயற்கையானது. நினைப்பதை இழந்து விட்டால் அது வேறு வாழ்க்கை. விலங்கு வாழ்க்கை.