பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தோல்வி என்பது மிகவும் சாதாரணமானது. நிரந்தர மானது அல்ல... நிழல் போல் வந்து, நகர்ந்து மறைவதே தோல்வி. தோல்வி என்பது ஒருவரை அடியோடு வீழ்த்திவிடுவது அல்ல. நிமிர்ந்து நிற்க வைக்கும் பரிபூரண பிரயத்தனம் தான் அது . தோல்வி என்பது முடிவு அல்ல. அது ஒரு தொடக்கமே! மீண்டும் புத்திசாலித்தனமாக முயற்சி செய்யும் எழுச்சியைத் கரும் ஒரு அறிவு பூர்வமான அனுபவந்தான். தோல்வி என்பது உண்மையான வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் உண்மையான தூதுவன கும். உனது தவறு என்ன? எங்கே என்ன எப்பொழுது எப்படி நடந்தது என்பதை சுட்டிக் காட்ட வந் திருக்கும் கோபம் பாராட்டாத ஒரு குணமுள்ள குரு. எங்கேயோ ஒரு தவறு நேர்ந்திருக்கிறது? எப்படியோ நமது உறுதியில் நிலை குலேந்திருக்கிறது? நம்மையறி யாமலேயே நாம் சரியான பாதையில் செல்லவில்லை என்பதை அறிவுறுத்தவே இந்தத் தோல்வி வந்திருக்கிறது என்பதைத் தான் உணர வேண்டும். அதற்கான காரணங்கள் எத்தனையோ இருக்கலாம்! நமது பலவீனமாக இருக்கலாம். நமது சோம்பேறித் தனமாகவும் இருக்கலாம். நம்மையறியாமல் என்ன நேர்ந்து விடும்? நமக்கு வெற்றி இல்லாமல் வேறு யாருக்கு வரும் என்ற தலைக்கணம் மிகுந்த கற்பெருமையாகக் கூட இருக்கலாம். -