பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 இனிய குணங்களை வளர்த்தும், இதமான சுகங்களைப் பெற்றும் மகிழ்ச்சியாக வாழ முடியும். ஆனல், மகிழ்ச்சியில்லாமல் குழம்புகின்றவர்கள் யார் ? மருண்டு திரிபவர்கள் யார் ? மயங்கிக் கிடப்பவர்கள் யார் ? உலகமே இருளாகி விட்டது என்று உளறி அலைபவர்கள் யார் ? இந்த உண்மையைப் புரிந்து கொண்டு விட்டால், நாம் நம் மகிழ்ச்சியாக வாழும் நோக்கத்திலே பாதி தூரத்தைக் கடந்து விட்டவர்கள் ஆகி விடுவோம். யார் யார் மகிழ்ச்சியை இழக்கும் மனிதர்கள்; இதோ இந்தப் பட்டியலைப் படியுங்கள் புரியும். எந்த விஷயத்தை எடுத்தாலும் அதை இன்னென்றுடன் ஒப்பிட்டுப் பார்த்து விடுதல். ஒரு பேணு வாங்கு கிருர் என்று: வைத்துக் கொள்வோம், அடுத்தவனுடைய பேணு தன்னு: டையதைவிட அழகாக இருக்கிறதே.-நன்ருக எழுதுகிறதே... விலை உயர்ந்ததாக விளங்குகிறதே....நாம் ஏமாந்து போய். இந்தப் பேளுவை வாங்கி விட்டோமோ என்பன போன்ற கற்பனைகளை ஒப்பிட்டுப் பார்த்து விட்டு, நினைவுகளில் ஏற்றிக் கொண்டு சிரமப்படுவதுதான். வாங்கிய பொருளை மகிழ்ச்சியாகப் பயன்படுத்துவதற்கு மாருக மனக் குழப்பத்துட னும் எரிச்சலுடனும் பயன்படுத்தி மயங்கிக் கொண்டு வாழ்பவர் ஒரு வகை. எந்த விஷயத்தையும் பிரித்துப் பார்ப்பது. இந்த விஷயத் தால் நமக்கு என்ன லாபம் ? மற்றவர்களுக்கு அதிகம் போய் விடாமல் எப்படித் தடுப்பது ? தொடர்ந்து நமக்கே கிடைக்க என்ன செய்ய வேண்டும் ? இப்படியாக வருகின்ற சூழ் நிலை களே தம் மகிழ்ச்சிக்காகப் பொருத்திப்பார்க்காமல், பிரித்துப் பார்ப்பவர்கள். தங்களுக்குள்ளே ஒருவிதமான வெறுப்பை வளர்த்துக் கொண்டு, மகிழ்ச்சியை இழந்துத் துடிக்கின்ருர் கள். அவர்கள் மனம்தானே அப்படிப்படுத்துகிறது ?