பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 ருர்கள். மற்றவர்களுடன் கலந்துறவாடுகின்ருர்கள். எதை யும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கின்ருர்கள். தண்ணிரும் பாலும் கலந்த திரவத்தைக் கொடுத்தால், அன்னப் பறவை தண்ணிரை நீக்கிவிட்டுப் பாலை மட்டும் குடிக்கும் என் பார்கள். - - - -

  • அது போலவே, நன்மையும் தீமையும் கலந்த நிகழ்ச்சி களின் கூட்டாக சூழ்நிலைகள் அமையும்போது, தீயன வற்றைத் தவிர்த்துவிட்டு, நன்மையை மட்டும் நயந்து ஏற்றப் போற்றிப் பாராட்டுகின்ற அன்ன மனதை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

என்ன மனம் வேண்டும் என்ருல், நமக்கு அன்ன மனம்" வேண்டும் என்ற சிந்தனமிக்கத் திறம்வாய்ந்த மனதை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே மகிழ்ச்சியான வாழ்வுக்கு கனிவான மார்க்கமாக அமைகிறது சிக்கல்கள் வருகின்றனவே ? எப்படி நிம்மதியாக வாழ முடியும் ? மனம் மட்டும் இருந்தால் போதுமா என்று நீங்கள் கேட்பதும் புரிகிறது. சிக்கல் இருந்தால்தான் வாழ்க்கை வாழ்க்கையாகத் தெரியும், போராட்டம் நிறைந்த வாழ்க்கைதான் பேரின்பக் களஞ்சியமாக இருக்கும், ஏதாவது ஒரு உருவத்தில் சிக்கல் வரத்தான் வரும். அதை விவேகமாக விரட்டி அடித்து வெற்றி பெறும்போது தான் உண்மையான மகிழ்ச்சியும், உவப்பான நிம்மதியும் கிடைக்கிறது. - சிக்கலே இல்லை, போராட்டமே இல்லை என்ருல், வாழ்க்கை போரடித்துப் போய் விடும். வாழ்க்கையில் தேக்கம் வந்துவிடும். முன்னேற்றம் இருக்காது. வாழ்வும் அலுத்துப் போகும். வளரா நிலை ஒன்று வாழ்க்கைக்கு வந்து