பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 விட்டால், மனம்பித்துப் பிடித்தது போலாகி விடும். இதல்ை வாழ்வே சுவையற்றதாகப் போய்விடும். o ஆகவே,சிக்கல்களை நாம் எதிர்பார்க்க வேண்டும். சிக்கல் முடியை சீவி சிங்காரமாக சடைபோடும்போது ஏற்படுகின்ற அலங்கார உணர்வுபோல, சிக்கலைத் தீர்க்கத்தெரிந்த மனமே செயலே சுகத்தை அனுபவிக்கிறது. இந்த உலகில் எத்தனையோ மேடுபள்ளங்கள். இரவு பகல்கள். அதுபோலவே நமது வாழ்க்கையில் எத்தனையோ ஏற்றங்கள் மாற்றங்கள். நன்மைகள், தீமைகள், சுகங்கள், சுக வீனங்கள், சந்தேகங்கள், நம்பிக்கைகள். சந்தோஷங்கள், துக்கங்கள் இறப்புகள், பிறப்புகள் இவையெல்லாம் வாழ்வின் ஒரு அங்கம்தான். அங்கம் இல்லாத உடல் அசிங்கமாக இருக்குமே ! அது. போலவே சிக்கல்கள் இல்லாத வாழ்க்கை சுவையற்றதாகத் தானே தெரியும் ? அப்படித்தானே அமையும் ! ஏனென் ருல் இதுதான் இயற்கையின் சட்டம், இறை வனின் திட்டம், நமக்கு சிக்கலும் போராட்டமும் இருக்கும்பொழுது அதைத் தீர்க்க இடம் மாறுகிருேம். வழி காண்கிருேம், செயல் புரிகிருேம். ஆக்கபூர்வமான அத்தனை விஷயங்களை யும் பண்ணுகிருேம். ஆமாம் நமது வாழ்க்கை தேங்கிநிற்கும் குட்டையல்ல. திரண்டு குதித்து வரும் ஜீவநதியானது நமது வாழ்வுநிலை யானது சுவற்றில் அடிக்கப்பட்ட ஆணி அல்ல. சுதந்திர மாக சுற்றிவரும் தென்றல் காற்று. இதை நாம் உணர்ந்து கொண்டால் போதும்.