பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. நீக்கலும் நீங்கலும் o • 1. நீக்குவதை நீக்கி, விட்டு, நீங்குவதற்கு நீங்கத் தெரிந்து கொண்டால் நிம்மதிய்ான வாழ்க்கை கிடைத்து விடும். மனம் விரும்புகிற மகிழ்ச்சியும் நிறைந்து கொள்ளும். ho சூரியன் தோன்றியவுடனே உலகம் ஒளி மயமாகி விடுவது போல, மலர் விரிந்தவுடனேயே மணம் நிரம்பி வழிவது போல, தினம் ஒரு நாள் என்று தொடங்கிய வுடனேயே, நிம்மதியும் மகிழ்ச்சியும் வந்து சேர்ந்து வழி நடத் தி விடும். வாழ்க்கை என்பது ஒரு பிரச்சினை தான். இல்லையென்று யார் சொன்னது? அதனுல்தான் குழந்தை இந்த உலகைப் பார்க்க வரும் பொழுதே அழுது கொண்டே பிறக்கிறது. அந்த அழுகை இறக்கும் வரை ஒய்வதில்லை. ஏதாவது ஒன்றுக்காக மனதுக்கு உள்ளேயோ அல்லது வாய்விட்டோ அலறிக் கொண்டே இருக்கிறது. நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு பிரச்சீனேதான், அதைத் தீர்க்கவோ அல்லது தவிர்க்கவோ வழியில்லை. வாழ்க்கையை