பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 வாழ்ந்து தான் ஆகவேண்டும். அதற்காக நாம் அணுகு. கின்ற முறை தான் நீக்கலும் நீங்கலும். --- --

  • --.

... .". வாழ்க்கை என்பது நின்று இனப்பாறி படுத்துக் கிடப்ப தல்ல. அது இடைவிடாமல், நிற்காமல் தொடர்ந்து. முன்னேறிக் கொண்டிருப்பதாகும். அந்த முன்னேற்றமான இயக்கத்தில் ஒவ்வொரு மனிதனும் அவனுக்கு ஏற்றவாறு உரிய முறையில் சில பல அனுபவங்களைப் பெற்றுக் கொள் கிருன். புதிய அர்த்தங்களைப் புரிந்து கொள்கிருன். விடை தெரியாத கேள்விகளைக் கேட்டு மிரண்டு கொள்கிருன். = *. ஆகவே, வாழ்க்கைப் பிரச்சினைகள் என்பது தீராத முடி யாத ஒரு தொடர்கதையாகும். ஆனல் அதிலே பெறுகின் (Dஅனுபவங்கள் தான் ஆனந்தமான ஆரம்பமாகும். - --- - - ஆகவே, வாழ்க்கை ஒரு பிரச்சினைதான் என்பதை எந்த மனிதன் ஏற்றுக்கொள்கிருகுே, அவனே மகிழ்ச்சியாக வாழத் தயாராகி விட்டான் என்று நாம் கூறிவிடலாம். பிரச்சினை எல்லோருக்கும் இருக்கிறது. அது தான் வாழ்க்கை என்பதை உணர்ந்து கொண்டாலே, அவன் பிரச்சினைகளச் சந்திக்கும் திறன் பெற்று விட்டான் என்பது இரண்டாவது, கட்டமாகும். - - - சந்திக்கும் சக்தி வந்து விட்டால் என்பது, அவன் தன்னைத் தயார் செய்து கொள்ளும் பக்குவங்களை, தன்னையறி யாமலேயே பழகிக் கொள் கிருன். அதாவது அவன் தன்னையே தருகிருன். அதற்காக வருவதை அலட்டிக் கொள்:ளரயில் பெறுகிருன். கொண்டும் கொடுத்தும் அவன் பெறும் அனுபவங்கள், புதிய சந்தர்ப்பங் களின் அர்த்தங்கள், புரியாத புதிர்களின் விடுபாடுகள் "எல்லாமே அவ னுக்கு வியப்பாகி, மலைப்பை நீக்கி, மகிழ்ச்சியை அளிக்கின்றன.