பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

ஒன்றை மட்டும் நாம் புரிந்து கொள்ள வேண்டும், வாழ்க்கை நமக்குத் தருகின்ற எதையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது. இது தான் வேண்டும். இப்படித்தான் தர வேண்டும்' என்று நமது வாழ்க்கையில் எதுவுமே எதிர்பார்க்க முடியாது. நமது எதிர் காலத்தை நம்மால் கணிக்கவும் முடியாது. நிர்ணயிக்கவும் முடியாது.

ஏனென்ருல், வாழ்க்கையானது சிறு சிறு நிகழ்ச்சிகளால் சுழன்று வருகின்ற அமைப்பாகும். பெரிய பெரிய" என்று நாம் கூறிக்கொள்ளவே முடியாது. எனவே, எவன் இந்தப் பிரச்சினையான வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்கிருன் என்ருல், இங்கே பாருங்கள். இரண்டு விதமான மனிதர்களே நாம் சந்திக்கிருேம். முதலாமவன் வீட்டின் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு காற்று வாங்குகின்ற குணம் படைத்தவன். இரண்டாமவன், சன்னல் கதவுகளை அடைத்துக் கொண்டு புழுக்கத்தில்ை அவதிப்பட்ட வண்ணம் சமாளிக்கும் குணம் படைத்தவன் . திறந்த கதவுகளை வைத்திருப்பவன் என்பது, வந்திருப் பதை வைத்துக் கொண்டு, அவற்றிலே சிறந்த்தைப் பெற முயல்பவன். அவனே சிறந்ததைப் பெறுவதின் மூலம் அமைதியையும் ஆனந்தத்தையும் அடிைகிருன். கதவுகளை மூடிக் கொள்பவன், பிரச்சினைகளைச் சந்திக்கப் பயந்தவன். குழப்பங்களால் தன் ஆன சுற்றிப் போர்த்திக் கொண்டு, கற்பனைக் கவலைகளால் அரிக்கப்படுகின்ருன். எனவே, சூரியனை எதிர்பார்த்து சூரியனின் சூடுபட்டு மலர்கின்ற மலர்களைப் போல, மனிதன் பிரச்சிஜன. குட்டில் இதம் பெறவேண்டும். சுகம் பெற வேண்டும். மகிழ்ந்து வாழ வேண்டும்.