பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 6 _மகிழ்ச்சியை யாரும் நமக்குத் தந்துவிட முடியாது. யாரும் நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட வேண்டுமென்று கட்டளையிடவும் முடியாது. கட்டாயப்படுத்தி விடவும் முடியாது. தானே தனக்குத் தலைவனும் பகைவனும்’ என்பார்களே, அது போல, நாமே தான் நமக்கு மகிழ்ச்சி யைக் கொடுத்துக் கொள்ள முடியும். இ து தான் உலக நியதி, உண்மையான வழியும் கூட. வாழ்க்கை என்பது அனுபவங்களால் ஆனது. ஒவ்வொரு திமிடமும் நாம் கற்றுக் கொள்ளவும், வருவ ை ஏற்றுக் கொள்ளவும், வேண்டாததை மாற்றிக் கொள்ளவும், கூடிய அறிவையும் அனுபவங்களையும் கொடுத்துக் கொண்டிருப்பது தான் வாழ்க்கையாகும். ஆ க வே, உள்ள நிலையை அறிவதிலும், உணர்ந்து அனுபவங்களைப் பெறுவதிலும் உள்ள திறமையே உற்சாகத்தையும் உண்மையான மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ! எல்லாம் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். எல்லா வற்றிலும் நாம் திறமை மிக்கவராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறில்லை. ஆணுல் அப்படி இருக்கத் தான் வேண்டும் என்பது அவசியமுமில்லை. இருக்கவும் முடியாது. நமக்குத் தெரிந்ததை தெரியும் என்போம். தெரியாததை தெரியாது என்போம். இது தவறு மில்லை. அவமான முமில்லை. செய்ய முடிகின்ற காரியத்தை முடியும் என்போம் முடியாத காரியத்தை என்னல் முடியாது. என்போம். அப்படி ஒத்துக்கொள்வது என்பது மோசமான தன்மை யல்ல நேர்மையான பண்பாகும். பொய் சொல்லிப் பெருமை தேட முயற்சிப்பது. கைப் பைக்குள் நெருப்புத் துண்டுகளே வைத்து மூடிக்கொண்டு செல்வது போன்றதாகும். உண்மையான மனமும் நேர்மை