பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 8O அறிவுக்காக - உயர்ந்தவர்களை ஒப்பிட்டு நோக்கி அவர்களைப் போல உயர முயல வேண்டும். பொருள் என்ருல், தம்மை விட ஏழைகளை நோக்கி நாம் தான் செல்வர்கள் என்று திருப்தி பெற வேண்டும். பொருளில் உயர்ந்தவர்களைப் பார்த்துப் பொருமைப் படுவதும், அறிவில் உயர்ந்தவர்களைப் பார்த்து கேலிகள் புரிவதும், கீழாகி நாசமடைவதற்குரிய பேய்க் குணங்களாகும். இந்த சிறு கருத்தை நீங்கள் பின்பற்றுங்கள். இருக்கின்ற பொருள்களை வைத்து இன்பமடையுங்கள். இல்லாதவர்களைப் பார்த்து நம்மை இந்த அளவுக்காவது இறைவன் உயர்த்தி வைத்திருக்கிருனே’ என்று இறைவனுக்கு நன்றி கூறுங்கள். மகிழ்ச்சி மழையாக அல்லவா பொழிந்து உங்களை மலர வைக்கும் ! இந்த இன்ப மழைக்கு ஈடேது ? இணையேது ! 5. கடலுக்கு அலைகள் தான் அழகு. மனிதன் வாழ்வுக்குப் பிரச்சினைகள் தான் பெருமை. பிரச்சினை இல்லாத வாழ்க்கை போரடித்து விடும். பிரச்சினைகள் தினம் தினம் வரும். போகும். புதிது புதிதாக முளைக்கும். திளேக்கும். துளைக்கும். அதற்காக நாம் வருத்தப்படக் கூடாது. வாடிப் போய் விடக் கூடாது. வானத்தின் கீழே பூமியில் வாழ்ந்து கொண்டு, இடிக்கும் மழைக்கும் பயந்தால் முடியுமா ? அதுபோல் தான் பிரச்சினே களும். ஒரு சராசரி மனிதனுக்கு வயிற்றுப் பிரச்சினே பெரிய தாகும். வியாபாரிக்கு வருவதெல்லாம் பிரச்சினைகள் தான். அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அரசியல் வாதிகளுக்கு ஆயிரமாயிரமாய் பிரச்சினைகள் அடிக்கடி தோன்றும். பூகம்பமாய் கொந்தளிக்கும். பெரும் புனலாய் கொப்பளிக்கும். அதற்காகப் பயந்தால் முடியுமா ! ஆயிரமாயிரம் பசுக்களின் மத்தியிலே இருக்கின்ற தனது தாய்ப்பசுவை, ஓர் இளங் கன்றுக்குட்டி தேடி ஒடிக் கண்டு