பக்கம்:நீங்களும் மகிழ்ச்சியாக வாழலாம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 8. எண்ணிலா மீன்கள் வானில். எதற்கெல்லாம் பெயர்கள் உண்டு ? எண்ணிலா மீன்கள் நீரில் ? எதற்கெலாம் பெயர்கள் உண்டு? எண்ணிலா மக்கள் பாரில் ! எவர்க்கெல்லாம் பெயர்கள் உண்டு ? எண்ணியே பார்ட்பீர் நித்தம் ! இசைவுடன் உழைப்பீர் வாழ்விit' என்ற இப்பாடலைபலதரம் படித்துப் பாருங்கள், தோன்றில் புகழோடு தோன்றுக என்கிருர் வள்ளுவர். புகழோடு வாழ முயற்சிப்பது தான் வாழ்வின் நோக்கம். அந்தப் புகழை பிறர் போற்றும் வழியில் பெற முயலும் போதோ உயிர்களுக்கு மகிழ்ச்சி பிறந்து விடுவதை நீங்களும் பார்க்கலாம். நீங்கள் மறைந்த பிறகும் மற்றவர்கள் நினைத்துப் பின்பற்று. கின்ற சிறப்புக்குத் தான் நல்ல புகழ் என்று பெயர். நல்ல புகழில் நாட்டம் கொள்ளுங்கள், நல்ல செயலில் ஊட்டம் வையுங்கள். நல்ல நினைவில் நயந்து செல்லுங்கள், நல்ல. மொழிகளைப் பிறருக்கு நினைந்து சொல்லுங்கள். நல்லதை. நினைப்பார்க்கும் நல்லதை செய்பவர்க்கும் முதலில் சோதனைகள் திறையவே வரும். அதற்காகக் கலங்காதீர்கள். இறுதி வெற்றி நன் மைக்குத் தான்! தர்மத்திற்குத்தான். அது நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். 9. வாழ்வில் மு ன் னே ற் ற த் தி ற் கு ம் வெற்றிக்கும் புகழுக்கும் முய லும்போது, எத்தனையோ வழிகள் நமக்கு எதிரிலேயே தெரியும், எல்லாமே ஏற்ற வழிகள் ஆகாது. ஏற்ற வழிகள் எல்லாம் இயலும் வழிகளாக இருக்காது. இயலும் வழிகள் கூட இசைவுடன் தொடராது, வெற்றி வரை வந்தும் கூட பல முறைகளில் வழிகளில் தடை ஏற்பட்டு நின்று போய் விடும். -