பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

 'அறிவுடை ஒருவனே அரசனும் விரும்பும்' என்பது :புறநானூற்றுப் பாடல். இங்கே அறிவில்லாத, படிக்காத ஒருவனே, எல்லோரும் சென்று எதிர் கொள்வார் என்கிறார் அவ்வையார்!

இது எப்படி பொருந்தும் !

ஆமாம் ! அது தான் வாழ்க்கை தந்த அனுபவமாகும். படித்தவனான, பணக்காரன் ஒருவன் நோயாளியாக இருந்தால், அவனால் வீட்டிற்கு என்ன லாபம் ? சமுதாயத்திற்கு என்ன லாபம் ?

'கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும் வரா விட்டாலும் தாய்' என்கிறது ஒரு பழமொழி. வாழ்விற்கு மிக அத்யாவசியமான பணத்தைக் கொண்டு வராவிட்டாலும் பாசமாக வரவேற்கும் தாய், ஒருத்தி வலிமை இல்லாதவனே எப்படி வர வேற்பாள் !

புறநானூற்றுப் பாடலிலே ஒரு தாய் கூறுவதாக ஒரு பாடல். "என் மகன் எங்கே இருக்கிறான் என்று எனக்கே தெரியாது. ஏதாவது ஒரு போர்க்களத்தில் போர் செய்து கொண்டு இருப்பான். ஆனால், அவன் வாழ்ந்த வயிறு இதோ பாரம்மா ! புலி தங்கி இருந்து போன குகையைப் போல இருக்கிறது” என்று. தன் மகனே எங்கே இருக்கிறான் என்று கேட்ட ஒரு பெண்ணுக்குப் பதில் தருகிறாள்.

வலிமையுள்ள வீரனேயே தாய் விரும்புகிறாள் என்பதைக் காட்டத்தான், அவ்வை அவ்வாறு பாடினாள் போலும்.

கைப்பொருள் என்றால் பணம் என்று தானே பொருள் சொல்லியிருக்கிறார்கள், வலிமை என்று யாரும் சொல்ல வில்லையே என்று நீங்கள் கேட்பது புரிகிறது.