பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4. என்ன செய்யும் இந்தக் குறைகள் ?

கடல் ஒருபுறம் வற்றியது போலத் தோன்றினாலும். இன்னொரு புறத்தில் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது, என்றாலும் கடல் ஒருபோதும் வற்றுவதில்லை.

உடலிலும் ஓர் உறுட்பு குறைந்து இருந்தாலும் இன்னொரு புறம் மற்றொரு உறுப்பில் ஆற்றலும் சக்தியும் அதிகமாக வளர்ந்து கொண்டிருக்கும். உறுப்புக்கள் குறைந்தாலும், உடல் தன் உறுப்பை இழந்தாலும், உடலில் உள்ள ஆற்றல் ஒரு போதும் குறைந்து விடுவதில்லை.

இயற்கையின் இனிய சக்தியும் பெருமையும் இதுதான், அதுவும் இயற்கையை அனுடவிக்கின்ற மனிதர்களும், இதற்கு விலக்காக இருக்க முடியுமா என்ன?

அரிதரிது மானிடராசப்பிறத்தல் அரிது. அதனினும் அரிது கூன், குருடு, செவிடு, பீடு நீங்கிப் பிறத்தல் என்றாள் ஔவை. சூறையுடையவராகப் பிறப்பது நம் கையில் இல்லையே! அது கடவுளின் குற்றம்.

ஆனால். அந்தக் குறையை நிறைவுடமை ஆக்கி, நெஞ்சத்தால் நிமிர்ந்து உலகத்தில் உயர்ந்தவராகி விடுபவன் தான் மனிதன். அதை நிவர்த்தித்துக் கொள்ளும் வழிதான் அறிவுடைமையாகும்.