பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உறுப்பில் ஊனம் என்பது உருவாகின்ற ஞானத்தைக் குறைப்பது இல்லை. ஞானத்தையும் மாபெரும் பலத்தையும், காத்து வளர்க்கு ம் மாபெரும் பீடமாகவே குறைகள் நிறைவு செய்து உதவியிருக் கின்றன. இதை நிரூபித்துக் காட்டியிருக் கின்ருர்கள் பல வீரர்கள் தங்களது உண்மையான வாழ்க்கை, முறையால்.

விளையாட்டுப் போட்டி என்றால் வல்லமை உள்ளவர்களே போட்டியிட வந்துகூடும் இடமல்லவா ! அதிலும் ஒலிம்பிக் பந்தயங்களில் தங்கப்பதக்கங்களைப் பெற்று உலக வீரர்களாக, சிறந்த வீராங்கனைகளாக , அழியாப் புகழை பலர் பெற்றிருக்கின்ருர்கள் என்றால் நம்மால் நம்பமுடிகிறதா என்ன?

பிறக்கும் பொழுதே குறைமாதக் குழந்தை. பிறந்த குழந்தை இனி பிழைக்காது என்று பெற்றேர்கள் முடிவு கட்டி விட்டனர். இருந்தாலும் அந்தக்குழந்தை எப்படியோ பிழைத்துக் கொண்டது.

சிறுவகை வளர்ந்தபொழுது இளம்பிள்ளைவாதம் வந்துகால்களை முடக்கிவிட்டது. இவனால் இனி மேல் நிற்கவே முடியாது, நடக்கவே முடியாது. என்று டாக்டர்களும் முடிவுகட்டி விட்டனர்.

பலமில்லாத கால்களுக்குப் பயிற்சி செய்து பாருங்களேன் என்று ஒருவர் அறிவுரை தந்து விட்டுப் போய் விட்டார். அதையே அந்தச் சிறுவன் வேதவாக்காகக் கொண்டு விட்டான்.

பயிற்சியோ பயனளித்தது படுத்துக் கிடந்தவன் நிற்கத் தொடங்கினன். ஆனல் நாள் தோறும் நடைபெற்ற அவனது பயிற்சி நிற்கவில்லை. பிறகு, நடக்கத் தொடங்கினன். இருந்தாலும் பயிற்சியை அவன் விடவில்லை.