பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 47


அப்படி ஒல்லியான, ஒய்யாரமான உறுதியான உடல் அமையவேண்டும் என்பது அவசியமில்லை. இருந்தால் நல்லது தான்.

இதை ஏன் வலியுறுத்தி எழுதுகிறோம் என்றால் தண்ணிர் மிகுதியாக உள்ள கொழ கொழாத் தசைகள் . இறுக்கம் பெற்றால் என்னலாபம் ? எளிதாக இயங்க முடியும். பிறகென்ன ? நோயணுகா மேன்மை நிலையும் வந்துவிடும்.

3. தினந்தோறும் மனம் போல வாழலாம்!

வலிமையோடு நாம் இருக்கிறோம் என்றால், மனமும் வலிமையாகத் தானே இருக்கும்.

சோம்பேறியின் மனம் தான் தூங்கிக் கொண்டிருக்கும். எல்லாவற்றுக்கும் ஏங்கிக் கொண்டிருக்கும். துயரத்தில் நீந்திக் கொண்டிருககும். எதிர் காலம் பற்றி கனவு கண்டு கொண்டிருக்கும்.

வலிமையான மனமோ நிகழ் காலத்தில் நடமாடும். கடமையிலே கண்ணாக இருக்கும். சிறந்த காரியமாற்ற துடிதுடித்துக் கொண்டிருக்கும். சதா சுறுசுறுப்போடு இருந்து சகல விஷயங்களிலும் சமர்த்தாகவே விளங்கும்.

அப்படியென்றால் அன்றாடக் காரியங்களை அணுவும் பிசகாது ஆற்றிடும் நிலை தானே நிகழும்.

கடமைகளை நிறைவேற்றல், அதில் களைப்பின்றி முடித்தல், மீண்டும் களிப்போடு பணியினைத் தொடர்தல், அதற்கும் மேலே பொழுது போக்குக்குத் தேவையான மகிழ்ச்சியான விஷயங்களில் ஈடுபடுதல்.

மனம் போல தினந்தினம் காரியம் செய்து, அதன் விளைவுகளில் மகிழ்ந்து போகின்ற வாழ்க்கை மணியான வாழ்க்கை