பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 செயல்படுகின்ற தெளிவான தன்மை என்பதாக நாம் முதலில் ஒரு விளக்கம் தரலாம். அந்த உடற்கூறுகள் ஒன்று சேர்ந்து, உடலின் முக்கிய முன்னணி அவயவங்களான இதயம் சுவாசட்பை போன்ற வற்றின் செழுமையான செயல் திறனின் சீரிய ஆற்றலை முன்னிலைப் படுத்தி விளக்கிக் காட்டலாம். இப்படி ஒன்றொன் றாகக் கூறுவதற்குப் பதிலாக, வலிமை யின் குணாதிசயன்களை மூன்று வகையாகப் பிரித்துக் காட்டு வார்கள். வல்லுநர்கள. - 1. இதய சுவாச கோசங்களின் செயல்திறன் . 2. தசைகள் எலும்புகள் செயலாற்றல் 8. அடிப்படை உடல் இயக்கத் திறனாற்றல் இனி ஒவ்வொன்றின் பெருமையை விளக்கமாகக் காண் போம். 1. இதய சுவாச கோசங்களின் செயல்திறன் (Cardio vascular Endurance). - உடல் வலிமையைக் குறித்துக் காட்ட விரும்புபவர்கள் இதயத்தினைப் பற்றியும், அதனோடு அதிகத் தொடர்புள்ள சுவாச உறுப்புக்களைப் பற்றியும் தான் முதலில் விளக்குவார் கள். - உடலின் அடிப்படை உயிர்க் காற்று. உள்ளுக்கிழுக்கின்ற காற்றிலே, எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு, பிராணனைத் கருகின்ற பிராண வாயுவை மட்டும் சுவாசப்பை கவர்ந்து கொள்கிறது.