பக்கம்:நீங்களும் வலிமையோடு வாழலாம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
58

புடன் வளர்த்து, வாழ்வை இனிமையுடன் அனுபவிக்க உதவுகின்றன.

அடிப்படை உடல் இயக்கத் திறனாற்றல் (Motor Skill Ability)

ஒவ்வொரு மனிதரும் உன்னத சக்தி வாய்ந்தவர்களே. தங்களுக்கு சக்தி உள்ளது என்பதை உண்மையாக உணர்ந்து அதைப் போற்றி வளர்த்துக் கொள்பவர்கள் தான் உயர்ந்த அளவு உச்ச சக்தியைப் பெற்று உயர்கின்றார்கள். உய் கின்றார்கள்.

ஒவ்வொரு உடலிலும் உள்ள உடல் இயக்கத்தினாற்ற லைக் காட்டும் தன்மைகள் எவை என்றால், கீழே குறிப் பிட்டுக் காட்டப்பட்டி ருக்கும் இனிய தன்மைகள் தாம்.

(அ) விகரவு (Speed)

(ஆ) சக்தி (Power)

(இ) உடல் சம நிலை (Balance)

(ஈ) ஒருங்கிணைத்து செயலாற்றல் (Coordination)

(உ) நினைவுக் கேற்ற எளிதான உடலியக்கம் (Agility)

(ஊ) எதிர் செயல் திறம் (Reaction Time)

(அ) விரைவியக்கம்

ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்குரிய வேகம். அதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக செய்து முடிக்கும் விரைவுதான் விரைவான இயக்கமாகும்.