பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 நீங்காத நினைவுகள்

தாளாளருக்கு அதைப் பயன்படுத்த மனம் இல்லை பல கற்பனை இரசீதுகள் மூலம் அதைச் செலவுக் கணக்கில் காட்டுவதற்கு முயல்வதே அவர் திட்டமாக இருந்தது. அதுவே நடைபெற்றது அடியேனும் இக்காரியத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது இறைவனின் திட்டம் போலும். இவ்வாறு மறைந்த தொகைகள் தாம் மாறுவேடத்தில் நிரந்தர நிதியாக மாறினவோ? எப்படியோ நடைபெற்ற தில்லுமுல்லுகளினால் ரூ 5000/- வங்கியில் நிரந்தர நிதியாகப் போடப்பட்டு விட்டது "விநாசகாலத்திற்கு விபரீத புத்தி" என்ற பழமொழியை நினைத்துக் கொள்வதைத் தவிர ஏழையேன் என்செய்வேன்?

பதிவு பெற்ற செயற்குழு (Registered Body) அமைப்பது ஒன்றுதான் நிறைவேற்றப்படாத நிபந்தனை. "இந்தியன் கம்பெனி & Ltb" (Indian Companies Act) gospéâLLangs & Lib (Trust Act) என்றவற்றில் மாதிரிப் படிவங்கள் இருக்கின்றனவே என்று தெரிவித்தேன் அவர் காதில் அது ஏறவில்லை முன்னதின்கீழ் அமைத்தால் குறைந்தது 20 பேர் வேண்டும் பின்னதன்கீழே அமைந்தால் 7 பேர் போதும் என்று தெரிவித்தும், சில பள்ளிகளை நெருங்கித் தகவல்கள் கொண்டுமாறு பணித்தபோதுதான் இவர்தம் "சட்ட நுணுக்கம்" பெரிய வட்டம், என்பது எனக்குப் புலனாயிற்று சட்ட நூல்களில் கூட இஃது இருக்குமிடம் அறியார் போலும் என்று என் எளிய மனம் எண்ணியது.

I.G. பெருங்காயத்தை யோசனை கேட்டேன். உங்கள் பள்ளி மேலாளரும் தாளாளரும் வழக்குரைஞர்களாயிற்றே. அவர்கட்குத் தெரியாதா என்ன?" என்று அவருக்கே உரிய பாணியில் தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து வாயோரப் புன்முறுவல் செய்தார். இஃது என் பள்ளித்தலைவர்களின் அறியாமையைக் கிண்டல் செய்வது போலிருந்தது அவர் நினைத்தால் இஆர் உயர்நிலைப் பள்ளி, பொன்னையா உயர்நிலைப் பள்ளி, சீரங்கம் உயர்நிலைப் பள்ளிகளைப் பற்றிய கோப்புகளிலிருந்து நகல் எடுத்துத்