பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

P. முத்துவேங்கடாசல துரை 105

கூறியும் இரண்டாண்டுகள் கழித்துத் திரும்பி வந்து விடுவேன் என்று கூறியும் மனம் இரங்க வில்லை. மறுத்துவிட்டார்

நான் தொடங்கி வளர்த்த பள்ளியை முற்றிலும் துறந்துவிட முடிவு செய்தேன். "படமுடியாது இனித்துயரம், பட்டதெல்லாம் போதும் என்ற இந்த முடிவுக்கு வந்தேன். எது வந்தாலும் அஃது எம்பெருமானது அருள்தானே என்ற நம்பிக்கையைச் சிறுவயது முதற்கொண்டே என் இயல்பாகச் செய்துவிட்டான் என்னைப் படைத்த இறைவன். அவன்மீது எல்லாப் பாரத்தையும் போட்டு நிலைமையை விளக்கித் தாளாளரிடம் பேசிய அனைத்தையும் கோவைப்படுத்தி அழகான ஆங்கிலத்தில் அலுவலகக் குறிப்பாக எழுத்தர்மூலம் அனுப்பி வைத்தேன்; உடனே முடிவு தெரிய வேண்டும் என்று சொல்லியும் அனுப்பினேன். எழுத்தர் சீநிவாச அய்யங்கார் இங்கிதம் தெரிந்தவர். நீதிமன்றத்தில், அமீனாவாகப் பணியாற்றியவரல்லவா? நளினமாகப் பேசி வெற்றியுடன் திரும்ப நினைத்தார். இவர் பருப்பும் வேகவில்லை. "ஒப்பந்தத்திலுள்ள fluffgangosoflotuta Q&Lujamb” (Asperthe terms of the Agreement) என்று எழுதியனுப்பி விட்டார் தாளாளர். நான் அவரைக் கெஞ்சிக் கூத்தாடிச் சலுகை பெறவிரும்பவில்லை. இறுதிவரைப் பணிவாகப் போவதே முறை. என்பதை ஆண்டவன் எனக்கு வழிகாட்டிக் கொண்டே இருப்பான்.

இப்போது பகல் 11 மணி ரூ. 540-க்கு இலட்சுமி விலாஸ் வங்கிக்குப் பள்ளிப் பணியாளர் முத்துசாமிமூலம் ஒரு காசோலை அனுப்பி ஒரு Pay order வாங்கி வரும்படி செய்தேன். திரு. பிச்சுமணி அய்யரை உதவி ஆசிரியர் ஒரு கடிதம் தயார் செய்து தட்டச்சு செய்யும்படி பணித்தேன். "நிபந்தனைகளின்படி ரூ. 540! =க்கு மூன்று மாத ஊதியம் Payorder இணைத்துள்ளேன். தங்களிடம் விடுதலை பெறும் உத்தரவை கூட எதிர்பார்க்கவில்லை. பள்ளியில் நான் இருந்த காலத்தில் ஏதாவது குறைகள் இருப்பின் அவற்றை ஈடு செய்வேன்" என்ற வாசகம் இருக்குமாறு கடிதம் தயார் செய்யப் பெற்றது. பிற்பகல் 4 மணிக்குள் எழுத்தர் சீநிவாச அய்யங்கார் மூலம் கடிதத்தையும் Pay Order ஐயும் அனுப்பிக் கடிதம் பெற்றுக்