பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 நீங்காத நினைவுகள்

காணலாம். இன்று படித்து பட்டம் பெற்றுப் பல்வேறு அலுவல்களில் அமர்ந்து பணியாற்றபவர்கள் அனைவரும் வறிய குடும்பங்களைச் சார்ந்தவர்களே.

(உயர்படிப்பு இவருக்கு வாய்க்காது போயினும் குடியொன்றும் முழுகிப் போய்விட வில்லை. உள்ளூரிலேயே சபாபதி அய்யர், நம்பெருமாள் ரெட்டியார் சுப்பிரமணிய அய்யர் இவர்கள் இவருக்கு ஆசிரியர்களாக அமைந்தமையால் இவர் நன்முறையில் உருவானார். தமிழ் இலக்கியங்களில் ஓரளவு நல்ல பயிற்சி இருந்தமைக்கு நம்பெருமாள் ரெட்டியாரே முதற்காரணமானவர் என்று கருதலாம் தெலுங்கு ஆங்கிலம் இவற்றில் ஓரளவு பயிற்சியும் தமிழில் நல்ல பயிற்சியும் இருந்தது. கற்றறிந்த சான்றோர்களிடம் இலக்கிய சல்லாபங்களில் கலந்து மகிழும் பெருமை இவரிடம் இருந்ததை அடியேன் கண்டு மகிழ்ந்ததுண்டு கேள்வி ஞானம் நிறைய இருந்தது. "கற்றலிற் கேட்டலே நன்று" என்ற உண்மையை இவரிடம் காணலாம். எந்தக் கூட்டங்களிலும் இவர் கலந்து கொள்ளத் தவறுவதில்லை. சிறு வயது முதற்கொண்டே சாதுக்களின் கூட்டுறவும் பெரியோர்களின் தொடர்பும் இவரைச் சிறந்த மனிதராக்கின.

நினைவு 1 : அடியேன் துறையூர் உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் பொறுப்பேற்றதும் சாதி வேறுபாடு கருதாமல் துறையூரிலும், அதைச் சுற்றிலுமுள்ள சிற்றுர்களிலும் உள்ள பெரும் புள்ளிகளிடம் தொடர்பை வளர்த்துக் கொண்டேன். பெரும்பாலும் அங்கெல்லாம் நடைபெறும் திருமணங்கள். பெரும்பிரிவு நிகழ்ச்சிகள், விழாக்கள் இவற்றில் கலந்து கொள்வதில் தவறுவதில்லை. அடியேனும் பள்ளியிலும், துறையூரிலும் பலபல இலக்கியக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து பள்ளியையும் ஊரையும் கலகலப்பாக்கி வந்த நிகழ்ச்சிகளை நீள நினைந்துபார்த்து அசைபோட்டு மகிழ்கின்றேன்.

இவருடைய திருத்தந்தையாரால் தொடங்கப்பெற்ற விவேகானந்தர் வாசகசாலையின் ஆதரவில் இவர் பல இலக்கியங் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்வார். பல அறிஞர்கள்