பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். ஆர். நாகரெட்டியார் 109

இக்கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு அடியேன் இவருக்கு உறுதுணையாக இருந்தேன். பட்டிமன்றங்கள். கவியரங்குகள் இவற்றிற்கும் அவ்வப்போது ஏற்பாடுகள் இருந்து வந்தன. திரு தொ.மு. பாஸ்கரத் தொண்டமான், மீபாசோமு, பேராசிரியர் ஆ. முத்துசிவம், திருவீர. உலக ஊழியனரர் போன்ற சான்றோர்கள் வைரி செட்டிப் பாளையத்திற்கு வந்து போனதுண்டு. அடியேன் துறையூர்ப் பள்ளியில் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் இப்பெருமகன் கலந்து கொள்ளத் தவறுவதில்லை. அடியேனும் வைரிசெட்டிப்பாளையத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொள்வதுண்டு.

நினைவு - 2 : விதிகளுக்கு உட்பட்டு ஏழை மாணவர்கட்கு

சேர்ந்த ஏழை மாணவர்கட்கும் சில விதிகளின்கீழ் கட்டணச் சலுகைக்கு ஏற்பாடு செய்தேன். இதற்குமீறி ஒவ்வொரு வகுப்பிலும் ஒன்றிரண்டு முற்போக்கு சமூகத்தைச் சார்ந்த கட்டணம் செலுத்த முடியாதவர்கள் இருந்தனர். சில செல்வர்களை நாடி ஒருவரையாவது ஆறு ஆண்டுகட்குத் தத்து" எடுத்துக் கொள்ளுமாறு கோரியதில் பத்துப் பன்னிரண்டு மாணவர்கட்குச் சலுகை கிடைத்தது. பள்ளியிறுதித் தேர்வு முடிய தேர்வுக் கட்டணம் உட்பட திரு. நாகரெட்டியார் இரண்டு மாணவர்கட்குக் கட்டணம் செலுத்தியதாக நினைவு. ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்" என்ற பொன்மொழியைப் பொன்னேபோல் போற்றியவர் இப்பெருமகனார்.

நினைவு - 3 :1948 - சனவரி என்பதாக நினைவு: குடிமைப் பயிற்சி முகாம் ஒன்று பள்ளிக்கு வெளியில் நடத்த எண்ணம். "வெள்ளையப்பன்" வேண்டுமே. மாணாக்கர்களிடம் கட்டணமாகத் தண்ட எண்ணம் இல்லை. திட்டத்தைத் திரு. நாகரெட்டியார் முன்வைத்து 96 மாணவர்கட்கும் 6 ஆசிரியர்கட்கும் 3 நாட்கள் உணவு வசதி, தங்கும் வசதிகள் இலவசமாகத் தரமுடியுமா?" என்று எழுதிக் கேட்டேன். ஈத்துவக்கும் இன்பம் கண்ட வராதலால் உடனே ஒப்புக் கொண்டார். நானே என் தோழ ஆசிரியர்கள் திரு மாதுர்பூதம். திரு. உமாபதி ரெட்டியார் ஆகிய இருவருடன் சென்று திட்ட