பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். ஆர். நாகரெட்டியார் 111

நெருங்கி இருக்கும். மாணாக்கர்கள் எங்கள் கண்பார்வைக்கெட்டிய வரை விருப்பப்படி சுற்றலாம் என்ற அநுமதி தரப்பெற்றது அப்பொழுதுதான் மாணாக்கர்களின் தனித்தன்மையைக் கண்டறிவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்

நாங்கள் புறப்படுவதற்கு ஒரு வண்டியில் நீர் மோர், பகல் உணவுக்கு சித்திரான்னங்கள் இலைக்கட்டுடனும் இதர சிறு பாத்திரங்களுடனும் அனுப்பி வைத்தார். திரு. நாகரெட்டியார். பிற்பகல் 3 மணிக்கு காஃபிக்குரிய பால், சருக்கரை, காஃபிப் பொடி முதலியவை இதே வண்டியில் சென்றன. எங்கள் பள்ளியிலிருந்து வந்த முத்துசாமி என்ற உதவியாளனையும் இந்த வண்டியில் அனுப்பி வைத்தேன். மாணவர்கள் நடராஜா சர்வீஸில் செல்ல, அவர்களைத் திரு மாதுர்பூதம், மாணிக்கம், உமாபதி ரெட்டியார் ஆகியோர் நடத்திச் சென்றனர். நானும் எஞ்சிய ஆசிரியர்களும் தனி வண்டியில் சென்றோம். திரு. நாகரெட்டியார் அவர்களையும் எங்களுடன் வருமாறு வேண்டினோம். அவரும் மனமுவந்து எங்களுடன் பயணமானார். 10%மணி சுமாருக்குப் புளியஞ்சோலையை அடைந்தோம். மாணவர்கள் எங்களுக்கு முன்னதாகச் சென்றடைந்தனர். முதலில் எல்லோருக்கும் நீர் மோர் வழங்கப் பெற்றது. வெயிலில் நடந்து வந்த களைப்பு ஒருவாறு நீங்கியது பன்னிரண்டு மணிக்கு திரு நாகரெட்டியார் உரையாற்றினார் ஒன்றிரண்டு ஆண்டுகளில் தாம் வைரிசெட்டிப் பாளையத்தில் தொடங்கப் போகும் உயர் நிலைப் பள்ளி பற்றித் தாம் கற்பனையில் கண்டிருக்க வேண்டும் என்பது என் கணிப்பு: 1950-இல் உயர்நிலைப் பள்ளியும் வைரி செட்டிப் பாயைத்தில் தொடங்கப் பெற்றது.

பள்ளி உதவியாள் முகாமில் செய்த பணியை மறத்தல் முடியாது. பம்பரம்போல் சுழன்று உணவு பரிமாறுதல் போன்ற பணிகளைக் கவனித்துக் கொண்டமை மிகவும் பாராட்டத் தக்கது. எங்கள் பள்ளிக்கு முத்துசாமி சேவகனாக அமைந்தது பள்ளியின் தவப்பயனே என்று சொல்லவேண்டும். இவன் பாரதியாரின் "கண்ணன் - என் சேவகன்" போன்றவன்