பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 நீங்காத நினைவுகள்

8

திரு. தி.சு. அவினாசிலிங்கம்

நான் கல்லூரி மாணாக்கனாக இருந்த போதே 1934-39) நேரு அவர்களின் தன் வரலாற்றைப் படித்தேன். தொடர்ந்து "நான் கண்ட இந்தியா' 'உலக வரலாறு' படிக்க நேர்ந்தது. இவற்றை ஆங்கிலத்திலேயே படித்தேன். தன் வரலாற்றில் முதல் வாக்கியம் “An only son of a rich parents is apt to be spoilt, especially so in India" என்பது. இந்நிலையிலிருந்து தப்பி நாட்டுப் பணிக்கே தம்மை அர்ப்பணித்துக் கொண்டதை நினைந்து மகிழ்கின்றார் நேரு திரு. தி.சு. அவனாசிலிங்கமும் திருப்பூரில் செல்வப் பெற்றோர்கட்குப் பிறந்து, நற்கல்வி பெற்று, சிறந்த வழக்குரைஞராகத் திகழ்ந்து படோடோபமான இன்ப வாழ்க்கையை அநுபவித்திருக்க முடியும். ஆனால் அவர் "வெள்ளை வேட்டி சாமியராகவே இருந்து நாட்டுப் பணிக்கும், கல்விப் பணிக்கும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டது இறைவனின் திருக்குறிப்பாகும் தம் வாழ்நாள் முழுவதும் பணியே பரமன் வழிபாடு" என்ற கொள்கையே அவருக்கு ஒளி காட்டிக் கொண்டிருந்தது. அவரைச் சேர்ந்த நல்லோர் பலரும் அவரைக் காக்கும் வேலியாக அமைந்தனர். அவரை நல்வழியில் செல்லவும் துண்டுகோலாக அமைந்தனர். அவரது வாழ்க்கை ஒரு பார காவியம் போல் அமைந்தது. இத்தகைய பெரியார் 1942 முதல் என் வீர வழிபாட்டிற்கு உரியவராக இருந்து வந்தார். இல்லறத்தைத் துறந்த இராமாநுசர் வைணவ உலகத்திற்குக் கிடைத்த செல்வம்போல் மாணி வாழ்க்கை வாழ்ந்த அய்யா அவர்கள் இப்படிதான் அவர் நிறுவனங்களில் வழங்கப்படுவார் வாழ்க்கை கல்வியுலகிற்குக்

1 The sacred Touch- areap goal. Holdi, Bharatiya Vidya Bhavan, Kulapathi

Munshi Marg Bombay-400 007 Qaueñu$lu“ Lg (1986)