பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி.சு. அவினாசிலிங்கம் 127

ஒரு சமயம் பல்கலைக் கழகம் போய்வந்தபோது தமிழ்க் கலைக் களஞ்சிய அலுவலகம் சென்று திரு. பெ. தூரனைக் கண்டு அளவளாவினேன். அப்போது அவர் 10 தொகுதிகளாக இருந்த கலைக்களஞ்சியம் 12 தொகுதிகளாகப் (இரண்டாம் பதிப்பு) பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் தமக்கு உடல் நிலை சீர்கேடு அடைந்து வருவதால் தான் ஓய்வை நோக்கியிருப்பதாகத் தெரிவித்தார் என்னைத் தலைமைப் பதிப்பாசிரியர் பதவிக்கு விண்ணப்பம் தருமாறு பணித்தார். நானும் திருப்பதிக்குத் திரும்பியதும் விண்ணப்பம் அனுப்புவதாகக் கூறி அவரிடமிருந்து விடைபெற்றேன்.

6.2.78 அன்று காஸ்மா பாலிட்டன் கிளப்பில் அய்யாவையும், தொடர்ந்து பிறகு திரு. தூரனைக் கலைக் களஞ்சிய அலுவலகத்திலும் சந்தித்துப் பேசினேன். அவர்கள் கேட்டுக் கொண்டபடி ஜூன் வரையிலும் திரு. துரன் தலைமைப் பதிப்பாசிரியராக இருக்கட்டும் என்றும், அது வரையில் நான் இணைப் பதிப்பாசிரியராக இருப்பதாகவும் அய்யாவிடம் தெரிவித்தேன் அவர் பெறுவதை விட ரூ. 50/- குறைவாக இருக்கலாம் எனவும் தெரிவித்தேன். இரண்டு திங்கள் அவர் அருகில் இருந்தால் சில வழிமுறைகளையும், அலுவலக மரபுகளையும் அறிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும் எனவும் தெரிவித்தேன். அய்யா அவர்கள் எனது நேர்மைக்கும், பணிவுக்கும் பாராட்டு தெரிவித்தார்கள்.

பிப்பிரவரி 10 நாள் முதல் இணையாசிரியர் பணியையும் ஜூன், 1 திங்கள் முதல் தலைமைப் பதிப்பாசிரியர் பணியையும் ஒப்புக்கொண்டு பணியில் தீவிரமாக இறங்கினேன் என் மனநிலைக்கும் திறமைக்கும் உகந்த பணியாக இருந்தமையால் பணி மனநிறைவு (Job satistaction) இருந்தது ஒய்வு ஊதியம் கூட இல்லாமல் சென்னைக்கு வரும் என் துணிவை வியந்து ஏழுமலையான்தான் எனக்கு இப்பணி கிடைக்கச் செய்தான் என நம்பி அவன் கருணையுள்ளத்தைப் போற்றுகின்றேன். நான் சிறிதும் முயலாமல் இந்தப் பணி எனக்கு வந்தது குறித்துச் சிந்திக்கும்போது,