பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 நீங்காத நினைவுகள்

நினைவு 9 : இது சற்றுக் கசப்பான நினைவாக எழுகின்றது. தொடர்ந்து பெருமாள் என்பவர் கோள் சொல்லி யதனாலும், தொடர்ந்து கடிதங்கள் எழுதியதனாலும் அய்யாவின் மனம் மாறியது.11.12.1978 கடிதத்தில் சில செய்திகளைச் தெரிவித்தார் மிக்க வருத்தத்துடன், நானும் மிகவும் வருந்தினேன். இதற்கு மேல் ஈண்டு விவரிக்க விரும்பவில்லை." இது பின்னால் வரப்போகும் நிகழ்ச்சியொன்றுக்கு கொடியேற்றுவது போல் அமைந்தது.

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்" என்ற தெரிந்து தெளிதல்"பற்றிய வள்ளுவரின் வாக்கு அய்யாவின் நினைவிற்கு வரவில்லை போலும். திரு தூரன் தமிழ் வளர்ச்சிக் கழகச் செயலராக இருந்தபோது திரு. பெருமாள் என்பவர் துணைப் பதிப்பாசிரியர் பணியைத் தவிர அலுவலக மேலாளராகவும் பணியாற்றினர். அதனால் தூரனை மீறி அய்யாவுக்குக் கடிதம் போக வாய்ப்பில்லை. இரகசியமாகப் போவதைத் தவிர). நான் முதன்மைப் பதிப்பாசியராக நியமனம் பெற்றபோது செயலாளர் பொறுப்பு எனக்குத் தரப்பெறவில்லை. நானறியாமல் பெருமாள் அய்யாவுக்கு எத்தனையோ கடிதங்கள் எழுதி அய்யாவின் உள்ளத்தைக் கெடுத்திருக்கலாம் என்பது துணைப் பதிப்பாசிரியர்கள் அனைவரின் ஊகம். இஃது தான் உண்மை என்பது பின்னர் எனக்கு உறுதிப்பட்டது.

நினைவு - 10 கழகச் செயலராக இருந்த ரா. குழந்தைவேலு IAS அரசுச்செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் கட்டம். அவரைக் கலைக் களஞ்சிய நிர்வாகத் தலைமைப் பதிப்பாசிரியராக நியமிக்க அய்யாவின் எண்ணம்; பிறரது எண்ணமாகவும் இருக்கலாம். ஆகவே நாள் குறிப்பிடப் பெறாமல் என்னுடைய பதவிக்காலம் 9.279 நாளுடன் முடிவு பெறுகிறதென்றும், முதன்மைப் பதிப்பாசிரியர் பொறுப்பைச் செயலர் ரா. குழந்தை வேலுவிடம்

14 விவரம் நினைவுக்குமிழிகள் - 5 என்ற நூலில் தெளிவாகத் தரப்

பெற்றுள்ளது. 15 குறள், 510