பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி.சு. அவினாசிலிங்கம் 131

தந்துவிடவேண்டும் என்றும் அய்யாவிடமிருந்து ஓர் ஆங்கிலக் கடிதம் வந்தது" அதனுடன் 29,179 நாளிட்ட தமிழ்க் கடிதம் ஒன்றும் வந்தது அதில் தங்களை நியமித்த போது தங்களைத் தொடர்ந்து இப்பணி பூர்த்தியாகும் வரை நீங்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று நினைத்து நியமனம் செய்யப்பட்டது. ஆனால் வேறுவிதமாக முடிந்தது பற்றி வருத்தந்தான் தங்கள் அநுபவத்தை வேறு விதமாகப் பயன்படுத்தி அதன்மூலம் தங்களுக்கும் கலைக்களஞ்சியப் பணிக்கும் பயன்படுமானால் மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஆண்டவன் வழிகாட்ட வேண்டும்" என்ற வாசகம் இருந்தது.

இதனை என் தோழ ஆசிரியர்கட்குத் தெரிவித்ததும் அவர்கள் வெகுண்டெழுந்து 31 179 அன்று எல்லோரும் கையெழுத்திட்டுத் திரும்ப யோசிக்குமாறு வேண்டுகோள் கடிதம் அனுப்பினார்கள் நானும் அன்றே நானறிந்த வரையில் தமிழ் வளர்ச்சிக் கழகம், நிர்வாகக் குழு, அய்யா என்ற வேறுபாடு இல்லை; எல்லாம் அத்வைத நிலையில் அய்யாதான். ஆகையால் புனராலோசனை செய்து முடிவை மாற்றிக் கொள்ள வேண்டுகின்றேன்" என்று எழுதினேன் அறிஞர்கள் பலர் இவ்வாறே எழுதினதாகக் கேள்வி. பலன் இராது என்று கருதி, ஐஸ்டிஸ் மகராசனைக் கலந்து ஆணையிலுள்ள தவறுதலைச் சுட்டிக்காட்டி "பழைய ஆணை 92.1979 இன்படி என் பதவி முடிகிறது என்பது தவறு. அதனை 3061979 என்று மாற்றிக் கொள்ள வேண்டியது" என்று முறையான ஆங்கிலக் கடிதம் 31179 எழுதி வாளா இருந்து விட்டேன்.

நினைவு - 11 : "பெருமாள் - பிச்சாண்டி நிர்வாகம்" தவறு என்பதை அய்யா உணர்ந்திருக்க வேண்டும். கண்மூடித் தனமாகக் கையெழுத்திட்டது தவறு என்பதையாவது நினைந்து பார்த்திருக்க

16. திரு பெருமாளும் கணககர் பிசசாண்டியும் தயாரித்த டிராப்ட் கடிதத்தில் அய்யா கண்மூடித்தனமாகக் கையெழுத்திட்டதால் விளைந்த நிலை இது. தமிழ்க் கடிதம் அய்யாவின் வாசகம் என்பது எனக்குப் புரிந்தது பெருந்தமையும் பண்டாடும் அதில் ஒளிர்ந்தமையால்