பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி.சு. அவினாசிலிங்கம் 133

பெரியாரின் தலைமையில் ஒரு நற்பணியில் ஈடுபடுத்தினான் என்றும், அவனே இப்போது கழற்றிவிட்டான் என்றும் நினைத்துக் கொண்டேன் ஒருசில ஆண்டுகள் கலைக் களஞ்சியப் பணி தொடர்ந்திருக்குமானால், ஒரு பெரிய தமிழ்க் கருவூலம் தமிழன்னையில் திருவடியில் வைத்து அவள் ஆசி பெற்று மகிழ்ந்திருக்கக் கூடும் என்றும் ஒரு பெரியவரின் மனம் உகக்குமாறு பணியாற்றிப் பேரும் புகழும் பெற்றிருக்கக் கூடும் என்றும் கருத இடம் இருந்தது. இறையருள் அதற்கு துணைசெய்ய வில்லை.

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்" என்ற வள்ளுவர் வாய்மொழி எனக்கு உறுதுணையாக இருந்து மன அமைதியைக் கொடுத்தது. 10 ஆண்டுகள் கலைக் களஞ்சியப் பணி தொடர்ந்து நடைபெற்றிருக்குமானால் கலைக் களஞ்சியம் 12 தொகுதிகளும் வெளிவந்து இருக்கும். அய்யாவுக்கும் அடியேனுக்கும் ஊழியர்கட்கும் பேரும் புகழும் மனநிறைவும் கிட்டியிருக்கும். இதனை எழுதும்போது 29493 அய்யா இல்லை.

நெருநல் உளன்என ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு"

பிறப்பு: 8.5.1909 சிவப்பேறு : 21.11.91

பிற்குறிப்பு : கலைக்களஞ்சியப் பணி நின்றதற்கு என் மனத்திற்குப் படும் காரணங்கள் :

(1) நிர்வாக அமைப்பில் நல்லமுறை இல்லை. திரு. பெ. தூரன் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் செயலராகவும் கலைக் களஞ்சியத் தலைமைப் பதிப்பாசிரியராகவும் இருந்தார். அலுவலக நிர்வாகப் பொறுப்பு அவரிடம் இருந்தது.

17 குறள், 379 18 மேலது 336