பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 நீங்காத நினைவுகள்

நெருக்கடியால் பதவி இழப்பு நேரிடுகின்றது பல்வேறு சாணக்கியத்திற்குப் பிறகு நல்லோர் உதவியால் உதவிப் பஞ்சாயத்து அலுவலர் ஆகின்றார். மாத ஊதியம் ரூ 75'- இப்பதவிகாலத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு சைதை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் 1939 சேர்ந்து பயின்று எல்டி பட்டம் பெறுகின்றார்"

தொடக்க காலத்திலிருந்து இவர்தம் மனம் கல்வித்துறையில் அவாவி நின்றதால் எல்.டி. பட்டத்தின் கனத்தால் கல்வித்துறை உதவி sououmatism&# (Deputy Inspector of Schools) GäßQ59āsū பெறுகின்றார் இப்பதவிக் காலத்தில் அரசு விதித்த தேர்வுகளிலெல்லாம் (Departmental tests) தேர்ச்சி அடைகின்றார். @ggotsrå tomat. Läädogo -øgylaucosts (District Educational Officer) தேர்ந்தெடுக்கப் பெறுகின்றார். இவரது நெடுநாளைய ஆசை நிறைவேறுகின்றது. இக்காலத்தில் காந்தம் அம்மையாரைக் கலப்பு மணம் புரிந்து கொள்ளுகின்றார் பதிவுத் திருமணம் மூலம். இவர்தம் துணைவியார் B.Sc (Hons), M.Sc பட்டம் பெற்றவர். அம்மையாரும் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து பயின்று எல்.டி. பட்டம் பெறுகின்றார். சில நாட்களில் அவருக்கும் ஆசிரியை பதவி மகளிர் பள்ளியில் கிடைக்கின்றது. மனம் போன்ற மாங்கல்யம் என்று இருவரும் இனிய இல்லற வாழ்வில் புகுகின்றனர்.

நாளடைவில் அவருடைய திறமை நேர்மையின் காரணமாக சென்னை மாநகராட்சிக் கல்வி அதிகாரி, பொதுக் கல்வி உதவி இயக்குநர். இயக்குநர், உயர் கல்லூரிக் கல்வி இயக்குநர். நடுவண் அரசின் இணைக்கல்வி ஆலோசகர், சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் என்ற பதவிகள் இவரை வந்தடைகின்றன. அனைத்தலும் நற்பெயர் எடுத்து நானிலம் புகழ நிறைவாழ்வு வாழ்ந்தார். இந்த வாழ்வில் எண்ணற்றவர்கட்கு நியாயப்படி உதவிகள் செய்து அவர்களின் பாராட்டுதலையும் வாழ்த்தையும் பெறுகின்றார். இந்த நல்லோரிடம் என்னுடைய தொடர்புகள் நீங்காத நினைவுகளாகப் பதிவு பெறுகின்றன.

6 அதே கல்லூரியில் பயின்று 1941 இல் நானும் எல்.டி. பட்டம்

பெறுகின்றேன்.