பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 நீங்காத நினைவுகள்

வெளியிட்டுத் தாம் உண்மையிலேயே ஏழை பங்காளர் என்பதை மக்கள் அறியச் செய்தார். இது நடைபெற்றது 1962இல் என்பதாக நினைவு.

நான் திருப்பதியில் பணியாற்றிக் கொண்டிருந்த காலமும் அது. தமிழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை அதிகமாகக் கவனிப்பது என் வழக்கம். தவிர, அறிவியலில் ஆழங்கால் பட்டு விண்வெளிப் பயணம், குடிவழி, கால்வழி, தொலைக்காட்சி, வானொலி முதலி யவற்றைப்பற்றி நன்கு பயின்று கொண்டிருந்த காலம். காமராஜர் "இலவசக் கல்வி எல்லோருக்கும்" (உயர் நிலைப்பள்ளி வரை என்ற அறிவிப்பு வந்தபோது "இளைஞர் வானொலி" கழகம் அச்சாகி வெளிவரும் நேரமாக இருந்தது. 1962). அதனை,

பயிர்காக்கும் உழவரென உயிர்கள் காக்கும்

பான்மையிலே முதலமைச்சர்; வறியர் தாமும் மயல்போக்கும் கல்வியினால் மேன்மை பெற்று

வாழ்வுபெற வழியமைத்தேன்; பார தத்தை உயர்வாக்க உழைப்பதிலே முதன்மைத் தொண்டர்;

ஒருநலமும் தாம்நாடா காம ராசர், பெயர்வாழ்த்தி அவர்பிறந்த நன்னாள் வாழ்த்திப் பெரிதுவந்து படைக்கின்றேன் இந்த நூலை. என்ற பாடலால் அன்புப் படையலாக்கி மகிழ்ந்தேன். அந்த நூல் அவர்தம் ஒளிப்படம் தாங்கிய நிலையில் தமிழகத்தில் வலம் வந்து கொண்டுள்ளது. இதுகாறும் பல பதிப்புகள் வெளிவந்து விட்டன. 40க்கு மேல் விளக்கப் படங்கள் கொண்ட நூல் அது.

<s@š5 <sbar@ “<s|$su tólstrongyl" (Electronics for the Young) என்ற நூல் பல்வேறு விளக்கப் படங்களுடன் வெளிவரும் தருணம் (1963). அந்த நேரத்தில் சுந்தரவடிவேலுவின் மதிய உணவுத் திட்டமும் சீருடைத் திட்டமும் நாடாளுமன்றத்தில் புகழப்பட்டன. அதனை நினைவுகூறும் வகையில்,

நற்றவ வடிவாம் வள்ளுவன் கம்பன்

நல்லிளங் கோவுயர் கபிலன்