பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ.து. சுந்தர வடிவேலு 147

இதனால் என் மகனுக்கு திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் எம் எஸ்சிக்கு இடம் மறுக்கப் பெற்றது. பெங்களுர் முதலான இடங்களிலும் நிலை இதுதான். நிலையை விளக்கி சுந்தர வடிவேலுவைக் கேட்டதில் அவர் கோவை பூ.சா.கோ. கல்லூரியில் இடம் கிடைக்கச் செய்தார். சென்னை அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் இயற்பியல் முதுகலைப் பட்டையத்திற்குப் பயிலும் போது ஓராண்டுப் படிப்பு மாதம் ரூ. 250/= வீதம் பத்து மாதத்திற்கு ப்டிப்பூதியமும் கிடைக்கச் செய்தார்.

இங்ங்ணம் பிரச்சினைகளைக் கூர்ந்து ஆய்ந்து நூற்றுக்கணக்கான மாணவர்கட்கு உதவிய பெருமை திரு சுந்தர வடிவேலுக்கு உண்டு. அக்காலத்தில் மாணவர் உலகமே இவரை வாழ்த்தியது.

நினைவு 5 : திரு. சுந்தர வடிவேலு ஆறாண்டுகள் சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்த காலம் பொற்காலம், எல்லாத் துறைகளிலும் கருத்தரங்குகள் நடைபெற்றன எங்கும் "தூங்கு மூஞ்சிகள்" துறைத் தலைவராக இருக்கும்போது நடைமுறைச் செயல்களைத் தவிர புதியனவாக ஒன்றும் நடைபெறுவதில்லை. பயணப்படி கிடைத்தால் வெளியே சுற்றுவதற்கு எவரும் தயாராக இருப்பர் என்பது எங்கும் காணப்பெறும் அதிசயம்!

திருப்பதியில் பெரும்பாலான துறைகளில் நான் கண்ட உண்மை. சென்னைப் பல்கலைக் கழகத்தில் 1972இல் முதன்முதலாக முதல் பத்துநாள் பொதுநிலைக் கருத்தரங்கும், 1973இல் இரண்டாவது பத்துநாள் பொதுநிலைக் கருத்தரங்கும் நடைபெற்றன தமிழ்த்துறையில் ஆதரவு நல்குவதற்குப் பரந்த நோக்கமுடைய துணைவேந்தர் சுந்தர வடிவேலு. எடுத்து நடத்துவதற்குச் செயல்திறம் மிக்க டாக்டர் சஞ்சீவி. இரண்டாவது முறை நடைபெற்ற கருத்தரங்கு "தெய்வத் தமிழ்" பற்றியது இதில் சமணம், பெளத்தம், சைவம், வைணவம் சார்ந்த நூல்கள் ஆராயப் பெற்றன. வைணவ சமய நூல்கள்பற்றி ஆய்வுக் கட்டுரை படிக்க அடியேனுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஐஸ்டிஸ் N. கிருட்டிணசாமி ரெட்டியார் தலைமையில்