பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ.சுப. மாணிக்கம் 159

அனைவரும் அறிவியல் ஆசிரியரைத் தவிர வந்து பதவியில் அமர்ந்தனர். திருச்சூர் அரச பரம்பரையைச் சேர்ந்த ஐ. நாராயணமேனன் ஐ.என். மேனன் முதல்வராக இருந்தார். கலைக் கல்லூரி வளாகத்தில் நிலஉட்கூற்றியல் துறையின் மேல் மாடியில் கல்லூரி தொடங்கப் பெற்றது. கலைக் கல்லூரியின் முதல்வர் ஏ. நாராயணத் தம்பி (ஏ.என்.தம்பி என்பார். திருவனந்தபுரம் அரச, பரம்பரையைச் சேர்ந்தவர். இருவரது ஒற்றுமை கீரியும் பாம்பும்போல. ஓராண்டுக் காலம் ஒண்டுக் குடியாக இருந்து வந்தது.

அலுவலில் சேர்ந்ததும் கலைக்கல்லூரித் தமிழ்த் துறைக்குச் சென்று தமிழாசிரியர்கள் அனைவரையும் பார்த்து என்னை அறிமுகம் செய்து கொண்டேன். இங்ங்னமே தொடர்ந்து சமயம் நேரும்போதெல்லாம் அறிவியல் துறைகளிலும் ஆசிரியர்கள் பலரை அறிமுகம் செய்து கொண்டேன். காரணம், அறிவியல் கல்வியில் நாட்டம் கொண்டிருந்தேன். திருப்பதியிலும் அறிவியல் துறை ஆசிரியர்களிடம் அதிக நெருக்கமாகப் பழகி வந்தேன். அறிவியல் துறைகளில் புதியவற்றையும் முன்னர் அறிந்தவற்றில் நுண்பகுதிகளையும் ஆழ்ந்து கற்றுக் கொண்டிருந்தேன். அறிவியல் கருத்துகளை அழகிய எளிய தமிழில் அறிவியல் கற்காதவர்கட்கு அறிமுகம் செய்து வைக்கவேண்டும் என்ற உந்தல் என் கல்லூரி வாழ்க்கைக் கால முதற்கொண்டே என்னிடம் இருந்து வந்தது. ஐயங்கள் எழும்போது அறிவியல் ஆசிரியர்கள் துணையாக இருப்பதற்காகவே இவர்களிடம் அறிமுகமானேன். இவர்களில் முக்கியமானவர்கள் பேராசிரியர் K.G. கிருட்டிணன் இயல்பியல் பேரா. V.W சுப்பிரமணியம் (வேதியியல்). பின்னவர் திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில் (1937-39 என் வகுப்புத் தோழர் பதினோர் ஆண்டுகட்குப் பிறகு முதன் முதலாகச் சந்தித்ததால் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.

இடவசதிக் குறைவினால் அறிவியல் அல்லாத பிறபாட ஆசிரியர்கள் தங்குவதற்கு சீமைக்கரைத் தரையோடு இருக்கை வசதிகளோடும் கூடிய கீற்றுக் கொட்டகைகளில் தங்கும் வசதிகள் அமைக்கப்பெற்றிருந்தன.