பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 நீங்காத நினைவுகள்

ஏ என் தம்பி முதல்வர் திரு தம்பிக்குப் பிறகு திரு அலெக்ஸாண்டர் ஞா.முத்து முதல்வரானார் இவர் சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக்குழு உறுப்பினராகவும் இருந்தமையால் இவர் காலத்தில் தமிழ் எம் ஏ வகுப்பு தொடங்கப்பெறுவது எளிதாயிற்று. அக்காலத்தில் அழகப்பர் நிறுவனங்கள் பல புகழ் பெற்றிருந்தமையால் அவற்றின் வளர்ச்சியும் தடைபடுவதில்லை Tamil Concept of Love என்ற வ சுப மாவினால் சமர்ப்பிக்கப்பெற்ற ஆங்கில ஆய்வுக் கட்டுரை அவருக்குப் பிஎச்.டி பட்டத்தையும் ாட்டித் தந்தது துறையில் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது.

நினைவு 5 : ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இருந்தபோது நானும் என் தோழ ஆசிரியர் திரு. S. திருவேங்கடாச்சாரி அவர்களும் ரூ. 50/- வீதம் செலுத்தி பிஎச்.டி பட்டத்திற்கு ஆய்வு செய்யப் பதிவு செய்து கொள்ள சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு விண்ணப்பங்கள் அனுப்பினோம். கல்லூரியில் எம்.எட் கற்பிக்க வாய்ப்பு இல்லாதிருந்தாலும் அவர் எம்எட் பட்டம் பெற்றிருந்தமையால் அவருக்கு இசைவு வழங்கியது. எனக்கு வழங்க மறுத்தது - நான் எம்.எட்டு பட்டம் பெறாதவனாதலால், ரூ. 50- உம் திரும்ப வந்து சேர்ந்த்து திரு. தி.மூ. நாராயணசாமி பிள்ளை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராக இருந்தபோது என்னுடைய அறிவியல் நூல்களும், தமிழ்ப் பயிற்றும் முறை போன்ற நூல்கள் எனக்கு ஈட்டித் தந்த புகழால், என்னை 1958 கோடை விடுமுறையில் புகுமுக வகுப்புகளில் அறிவியலைத் தமிழில் கற்பிக்கும் முறைகளை ஆராயவும் அதற்கேற்ற கலைச்சொற்கள் பட்டியலைத் தொகுக்கவும் ஏற்படுத்தப் பெற்ற ஆறு வாரக் கருத்தரங்கில் தகுவழிகாணும் அறிஞராக (Resource person) நியமித்தார் இதனை இறைவன் இட்ட பணி எனக் கொண்டு என்னால் இயன்றவரை மனநிறைவுடன் கடமைகளை ஆற்றினேன்.

இந்த ஆறுவாரக் காலத்தில் நாடோறும் விருந்தினர் இல்லத்திலிருந்த நான் காலை 8.30 மணி சுமாருக்கு துணைவேந்தரின் திருமாளிகையிலிருப்பேன். 9.45 மணி வரை அவரோடு