பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ.சுப. மாணிக்கம் 167

தமிழகத்தில் எந்தப் பதவிக்கும் முயல்வதில்லை என்ற சூளுரையோடு 1960-இல் சென்ற நான் சூளுரைக்கு மாறாக விண்ணப்பித்தேன். பேட்டியும் நடந்தது பேட்டிக்கு வந்த பலர் "எனக்குத்தான் பதவி" என்று உறுதி கூறினார்கள். குழுவில் இருந்த திரு. நெது. சுந்தரவடிவேலும் "வெற்றி" என்று கைகுலுக்கினார் கிடைக்கவில்லை யாரைக் குறை கூறுவது? என் ஊழையே குறை கூறி, அமைதியடைந்தேன் அடுத்த ஆண்டு 1970) டாக்டர் வ.சுபமா அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பதவி ஏற்பதையும் 1970இல் திருப்பதியில் தமிழ் எம் ஏ தொடங்குவதற்குத் தமிழக அரசு மானியம் வழங்குவதையும் யார் அறிவார்கள்? தில்லைச் சிற்றம்பலவனின் அருள் டாக்டர் வ.சுபமாவுக்கு இருந்தது வேங்கடவன் தடுத்தாட்கொண்ட திருவ்ருள் எனக்கு இருந்தது என்று கொள்வதுதான் முறை உண்மையும் அதுதானே இதன்பிறகு தில்லை நடராசனும், திருப்பதி வேங்கடவனும் எங்கள் இருவரையும் நெருக்கமாக இணையச் செய்தனர். திருப்பதிப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் வ. சுபமா இல்லாமல் நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை என்பது மரபாகி விட்டது பருப்பு இல்லாத திருமணமா? என்றாகி விட்டது. ஆனால் எனக்குத்தான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எந்தவிதமான வாய்ப்புகளும் இல்லாமல் போய்விட்டது தில்லைச் சிற்றம்பலவன் அருள் இல்லை போலும் என்று நினைத்துக் கொண்டேன்

நினைவு 8 : தமிழ் எம் ஏ.க்கு "அகத்திணைக் கொள்கைகள்" என்பதை விருப்பப் பாடமாக்கினேன் நான் சங்க இலக்கியங்களில் எம்.ஏ மாணவர்கட்கு அழுத்தமான அறிவு ஏற்படவேண்டும் என்ற அழுத்தமான கொள்கையுடையவன் சங்க இலக்கியங்களில் அழுத்தமான அறிவுயைடவனே சிறந்த புலவன்

4 1969-அக்டோபரில் இரண்டும் கெட்டான் காலத்தில் தமிழக அரசு மானியம் கிடைத்தது அண்ணாமலைப் பதவி எனககு இலலை என்று தெரிந்த 4 மாத காலத்தில் இது பத்தாண்டுகள் தலைமைச் செயலகத்திற்குக் காவடி எடுத்ததால் ஏற்பட்ட விளைவு கலைஞர் முதல்வராக இருந்த காலத்தில்தான் இது வந்தது