பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 நீங்காத நினைவுகள்

நீதியரசர்கள் அரசியல் தலைவர்கள், என் உயர்நிலைப் பள்ளித் தோழ ஆசிரியர்கள். நண்பர்கள், சான்றோர்கள். திருவேங்கடவன் பல்கலைக் கழகப் பலதுறைப் பேராசிரியர்கள், முன்னைய - அன்றைய மாணவர்கள் - இவர்தம் வாழ்த்துச் செய்திகள் அடங்கிய மலர் ஒன்று பீகார் மாநில முன்னாள் அளுநர் திரு எம். அனந்த சயனம் அய்யங்கார் தலைமையில் வெளியிடப் பெற்றது. டாக்டர் வ.சுப. மாணிக்கம் அனுப்பிய செய்தி :

அறிவுத் தமிழ்ப் பேராசிரியர்.

"டாக்டர் சுப்பு ரெட்டியார் கல்வித் துறையில் உழைப்பால் உயர்ந்த பேராசிரியர். தமிழோடு, பலதுறையறிவு வாய்க்கப் பெற்றவர் தமிழில் உயரிய அறிவியல் நூல்கள் எழுதி ஆக்கம் செய்தவர். தமிழ் இலக்கண இலக்கியங்களையும் அறிவியல் நோக்கில் ஆய்ந்தவர், அரும் பொருள்களை அயராது எழுதி வழங்கும் ஆற்றலர்.

திருவேங்கடத்துத் திருப்பதி பல்கலைக் கழகத்தில் தமிழை நிறுவி வளர்ப்பதற்கென்றே வந்த பெருந்தகை தமிழ் முதுகலை வகுப்பைக் கொண்டு வந்தும், ஆய்வுத் துறை நிறுவியும் பட்ட ஆய்வாளர்களை உண்டாக்கியும் பன்முறையில் தமிழை அகலமாகவும் ஆழமாகவும் பரப்பியவர்.

சுவைபட உரையாடும் தன்மை வாய்ந்தவர் டாக்டர் ரெட்டியார். மனந்திறந்து உரையாடும் இயல்பினர். எண்ணியதை எதிர்த்தேனும் முடிக்கவல்ல திண்ணியர், மாணவர்பால் நன்மதிப்புக் கொண்டவர். மாணவர்தம் முன்னேற்றமே தம் முன்னேற்றமாகக் கருதுபவர். வள்ளுவர் விரும்பியபடி வாழ்வாங்கு வாழ்ந்துவரும் இல்லறத் தலைமகனார்.

தமிழ் வளர்க்கும் டாக்டர் ரெட்டியார்தம் வாழ்நாள் இருமடங்கு பெருகுக"

10

மணிவிழாமலர் - பக்46