பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ.சுப. மாணிக்கம் 177

கட்டுரைகள் எழுதி அவர்களைக் கொண்டு படிக்கச் செய்தேன் இவற்றையெல்லாம் தொகுத்து வைத்திருந்தேன். ஓய்வு பெற்று சென்னைக்கு வந்தபிறகு காஞ்சி மணிமொழியார் தமிழ்க் கல்லூரியில் (கோடம்பாக்கம் அக இலக்கியம் பற்றி ஆறு பொழிவுகள் நிகழ்த்தினேன். இவற்றையெல்லாம் தொகுத்து முறைப்படுத்தி "அகத்திணைக் கொள்கைகள்" என்ற தலைப்பில் ஒரு பெருநூலாக வெளியிட்டேன்." இந்தப் பெருநூலுக்கு டாக்டர் மா.வின் அணிந்துரை பெற்றேன். அதில் அவர் கூறுவது.

"நண்பர் பேராசிரியர் டாக்டர் ந. சுப்புரெட்டியார் துறை பல வல்ல ஒரு பெருந்தமிழ்ப் பேராசிரியர் என்பதனை நாடறியும். ஐம்பூத நுட்பவியலை அழகான தமிழில் ஆற்றலுடன் எழுதமுடியும் எனத் தமிழின் மொழியாண்மையைக் காட்டி மூன்று பரிசு பெற்றவர் பாட நூலாகப் பழைய அறிவியலை எழுதித் தமிழைப் பிற்படுத்தாமல் புத்தம் புதிய அறிவியற் பிடிப்புகளை வளரும் தமிழில் வரையாது எழுதிவரும் ஆக்க எழுத்தாளர். இத் தனிச்சிறப்பு இத்தமிழ்ப் பேராசிரியர்க்கே உண்டு.

எழுதுந்துறை எதுவாயினும் அறிவியல் உறவாடுவதை இவர்தம் கைவண்ணத்திற் காணலாம். "அகத்திணைக் கொள்கைள்" என்ற இந்த அகல நூலிலும் அறிவியல் உண்மைகள் படிந்துள கபிலரின் 'குறிஞ்சிப்பாட்டு" பிறப்பினைக் கூறுங்கால் "அறிவியலாசிரியர் தாமே தம் செய்திறனால் கருவியொன்று சமைத்துச் சில அறிவியல் மெய்ம்மைகளை விளக்குவதுபோல் ஆசிரியப் பெருந்தகையான கபிலரும் தாமே பாவியற்றி அதனைக் கொண்டே அகத்திணை நெறியின் உயிரணையை கருத்தினை அவ்வரசனுக்குத் ஆரிய வரதன் பிரகத்தனுக்குத் தெளிவுறுத்தினார்." என்று உவமங்காட்டுவர். கண்ணும் கண்ணும் சேர்வதால் காமத்தீ பிறப்பதைச் சிக்கிமுக்கிக் கற்கள் இரண்டும் சேர்ந்து தீ உண்டாகும் அறிவியல் கருத்துக்கு ஒப்பிடுவர். ஆண்-பெண் பாலியல்புகளை

11. இந்தப் பெருநூல் வெளியிட ரூபாய் இருபதாயிரத்திற்கு மேல் செலவு.

இதற்குத் தமிழக அரசு ரூ. 5000/= நிதி உதவியது