பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 நீங்காத நினைவுகள்

ஏழு மணிக்கு வந்து சேர்ந்தது. மீதி சோறு பண்ணையாட்களுக்கு வினியோகிக்கப் பெற்றது. நாங்களும் உண்டோம்

மறுநாள் காலையில் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு என் மனைவி குழந்தைகளுடன் பேருந்து மூலம் திருச்சி வந்து. நிலையத்தில் உணவு கொண்டு 1-30 புறப்படும் இருப்பூர்தியில் ஏறி மாலை 445க்கு காரைக்குடி வந்தடைந்தோம்.

நினைவு 15 :1968 ஆம் ஆண்டு ஜூன் 1 குடும்பத்துடன் சோழநாட்டுத் திருத்தலம் பயணம் தொடங்கி சிதம்பரம், திருவாரூர், கும்பகோணம், தஞ்சை இந்த இடங்களில் சில நாட்கள் தங்கி சுற்றுபுற திவ்விய தேசங்களையெல்லாம் சேவித்துக்கொண்டு ஒருநாள் கோட்டாத்தூர் சென்று உறவினர்களை சந்தித்து அளவளாவலாம் என்று திட்டமிட்டுக் கோட்டாத்தூர் சென்றேன். நல்லப்ப ரெட்டியார் மனைவி நோய்வாய்ப்பட்டு காலகதி அடைந்தார் என்ற செய்தி தான் முதலில் எங்களை எட்டியது. நாங்கள் திருத்தலப் பயணத்திலிருந்த போது திருப்பதிக்கு அஞ்சலில் அனுப்பிய செய்தி எங்களை எட்டவில்லை. குடும்பத்துடன் கேதம் விசாரிக்க வந்தது போலாயிற்று எங்கள் நிலை என் தம்பி கணப்தி வீட்டிலும் நல்லப்ப ரெட்டியார் வீட்டிலுமாக இரண்டிரண்டு நாட்கள் தங்கி திருச்சி வந்து திருப்பதி திரும்பினோம்.

நினைவு - 16 : 1981-ஆகஸ்டு வாக்கில் திருச்சிப்பக்கம் ஏதோ அலுவலாக வர நேர்ந்தது. கோட்டாத்தூர் சென்று K.N. நல்லப்ப ரெட்டியாரைப் பார்க்க நினைத்தேன் வந்தேன். திரு ரெட்டியார் படுத்த படுக்கையாக இருந்தார். சிறிதளவே பேச்சு இருந்தது. சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். எல்லாம் அரை நினைவில்தான் பேசினார். சென்னை திரும்பினேன். சில நாட்கள் கழிந்தன. சிவப்பேறு அடைந்த செய்தியைத் தெரிவித்தனர். திருமேனியைச் சென்று பார்க்கும் நேரம் போத வில்லை. சென்னையிலிருந்து போக வேண்டுமல்லவா? திடீர்ப் பயணம்-முரட்டுப் பயணம்-என் உடலுக்கு ஒத்துக்கொள்வதில்லை ஆனால் அவருடைய திருமேனி அவர்