பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

K. இராமச்சந்திர அய்யர் 27

தம் குடும்பத்தைக் கூட அதிகம் கவனிக்காமல் தாம் நிறுவிய சுமார் முப்பது மாணாக்கர்கள் அடங்கிய மாணாக்கர் விடுதியான "பெருங்குடும்பத்தில்"தான் அதிக அக்கறை செலுத்தி வந்ததை அக்கால மக்கள் நன்கு அறிவார்கள் விடுதியில் தங்கியிருந்த நாங்கள் நன்கு அறிவோம்.

அதிகாலையில் நாலரை ஐந்து மணிக்கு வந்து எல்லோரையும் "திருப்பள்ளிஎழுச்சி" செய்து விடுவார். அவர் இல்லம் முசிறி அக்கிரகாரத்தில் இருந்தது. அக்கிரகாரத்தின் கீழ்க்கோடியில் மாணாக்கர் விடுதி இருந்தது. அவர் இல்லத்திற்கும் மாணாக்கர் விடுதிக்கும் சுமார் 100/= கெ. தொலைவுதான் இருக்கும். காலையிலும் மாலையிலும் மாணாக்கர் விடுதிக்கு வருகை புரிவதில் தவற மாட்டார், நாட்டுப்புறத்திலிருந்து வந்த சிறுவர்கள் உருப்படியாவதற்குக் கே.ஆர். மேற்கொண்ட பணி பெரியது. மிகப் பெரியது. அதிகாலையில் மாணாக்கர்கள் ஒரு மணிநேரம் படிக்க வேண்டும் என்பது கட்டாயம். அதன்பிறகு காவிரியில் நீராடப் போக வேண்டும் ஒரு மணி நேரத்தில் திரும்பி சுமார் ஒன்றரை மணி நேரம் வீட்டு வேலை (Home work) செய்ய வேண்டும். மாலையில் ஒரு மணிநேரம் மாணாக்கர்கள் கூடி இறைவழிபாட்டுப் பாடல்களை இசைக்க வேண்டும். கலைமகள் சந்நிதியில் வாரம் ஒருமுறை - சனிக்கிழமை அன்று - எல்லோருக்கும் எண்ணெய்க் குளியல். வெந்நீர் வசதி உண்டு அன்று.

நினைவு 6 : நான் சிறு வயதில் மோர், தயிர், நெய் ஏராளமாக உண்டதாக என் அன்னை சொல்வார்கள். திருஷ்டியின்" காரணத்தால் இவற்றை உண்ணும் நிலை இல்லாது போயிற்று. ஆனால் பால் பருகும் பழக்கம் அன்றுமுதல் இன்றளவும் இருந்துவருகின்றது. எப்படியோ கே.ஆர். என்னைத் தயிர், மோர் உட்ககொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்தி விட்டார். முதலில் பலவிதமான தயிர் பச்சடிகளை உட்கொள்ளும் பழக்கத்தை உண்டாக்கினார்: வெங்காயம், தேங்காய், காரட், வெள்ளரிக்காய், தக்காளி போன்றவை கலந்த தயிர்ப் பச்சடிகளின் சுவையைக் காட்டச் செய்தார். அவற்றை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தினார். மோர்