பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நீங்காத நினைவுகள்

கட்டணம் வாங்குவதில் எந்தவித நிபந்தனைகளும் இல்லை. கட்சிக்காரர்களிடம் கறக்க முடிகிறவரை கறந்து கொள்ளலாம்.

நினைவு 4 : தொடக்கக் காலத்தில் சில ஆண்டுகள் நீதி மன்றத்திற்கு வந்துபோக மிதிவண்டிதான் இவருக்கு ஊர்தியாக இரந்தது. டென்னிஸ் விளையாடுவதற்குப் போய் வரவும் இதே வாகனம்தான் பயன்பட்டது. நான்கைந்து ஆண்டுகள் கழிந்ததும் பன்னிரண்டு ஆயிரத்திற்கு "ஹில்மென்" (Himan) என்ற மகிழ்வுந்து (Pleasure car) வாங்கி அதைத்தான் தன் வாகனமாகப் பயன்படுத்தினார். துறையூரில் யாரோ ஒர் அம்மையாருக்கு இந்த மகிழ்வுந்து பரிசுச் சீட்டில் முதல் பரிசாக விழுந்தது. அதனை விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்.

துறையூரில் அக்காலத்திலிருந்த 17 வழக்குரைஞர்களில் M.R. இராசகோபால் பிள்ளை, P அரங்கசாமி ரெட்டியார், P.M.வேங்கடாசல துரை இவர்களைத் தவிர எல்லோரும் பார்ப்பனர்கள். நான் சாதி சமயங்கட்கு அப்பாற்பட்டவன் என்பதை அக்காலத்தாரும், இக்காலத்தாரும் நன்கு அறிவார்கள் எங்கள் குல வைணவப் பெரியார் பெ இராமாநுச ரெட்டியார்,

தன்னிலைமைத் தானறியாத் தன்மையாளன்

சாதிவெறி சமயவெறி, சற்றுமில்லான்

துன்னியநல் சைவகுலத் தோன்ற லேனும்

தூயதிரு கச்சிநகர் அண்ணங்கரராம்

மன்னியவா சாரியரின் மலர்த்தாள் போற்றி

வைணவத்தின் வளமனைத்தும் உணரப் பெற்றோன்'

என்று கூறியிருப்பதே இதற்குச் சான்றாக அமையும். அரங்கசாமி ரெட்டியாரும் இத்தகையவரே. நாங்களிருவரும் இறை நம்பிக்கையைத் தவிர அனைத்திலும் தந்தை பெரியார் கொள்கையைப் பின்பற்றுபவர்கள். எங்கள் இருவருக்கும் பல

2 டாக்டர் ந. சுப்புரெட்டியார்-மணி விழா மலர் (1977)