பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

P. அரங்கசாமி ரெட்டியார் 39

கூட்டத்திற்குத் தலைமை வகிக்க வந்திருந்தபோது இத்தகைய கட்சிக் காரர்களைப்பற்றிக் குறிப்பிடடது நினைவிற்கு வந்தது குறுக்கு விசாரணையில் உண்மையை வாங்க முடியாத சாட்சிகளும் உள்ளனர் (Hard nut to crack). இதிலிருந்து "சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல்" என்ற உலக வசனத்தின்" பொருள் எனக்குத் தெளிவாகப் புலனாயிற்று இருவரும் நீதிமன்றத்திற்கு வெளியே உடன்பாடு செய்து கொள்வதே சிறந்தது என்பதும் தெளிவாயிற்று எல்லாவித வழக்குகட்கும் இந்தப் படிப்பினை பொருந்தாது. இயன்ற வரை நீதிமன்றத்திற்குப் போகாதிருப்பது மேல் என்ற படிப்பினையைப், பின்பற்றவேண்டும் என்பதுதான் நான் கண்ட உண்மை நடைமுறையில் இது சாத்தியப்படுவதில்லை.

நினைவு - 7 அரங்கசாமி ரெட்டியார் தொழில் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே கணிசமான அளவுக்குத் தொழிலில் வருவாய் இருந்தது. வருமான வரி (Income - tax) கட்டத் தொடங்கினார். துறையூர் வழக்கறிஞர்களில் யாரும் வருமானவரி கட்டியதில்லை. அரங்கசாமி ரெட்டியார் கட்டியவுடன் எல்லா வழக்குரைஞர்கட்கும் வருமான வரித் துறையினர் வரவு-செலவுக் கணக்கு தருமாறு அறிக்கை (Notice) அனுப்பினர். இஃது எல்லோருக்கும் தலைவலியைத் தந்தது உள்ளுக்குள் மனம் குமுறினர். அரங்கசாமி ரெட்டியார் வருமான வரி கட்டியதனால் ஏற்பட்ட விளைவுதான் இது என்ற முடிவுக்கும் வந்தனர். ஒருசிலர் வெளிப்படையாகவே "எதற்கு இந்தத் தலைவலியை வருவித்துக் கொண்டீர்கள்?" என்று கேட்டனராம். "எதிர்பாராத வகையில் நெஞ்சுவலி வருவதைத் தடுக்கும் பொருட்டுதான்" என்று மறுமொழி தந்ததாக ஒரு சமயம் என்னிடம் சொன்னதாக நினைவு.

நினைவு - 8 : அரங்கசாமி ரெட்டியார் 1950க்கு மேல்

திருச்சியிலும் துறையூரிலும் இருந்து கொண்டு வக்கீல் தொழில் நடத்தி வந்தார். வக்கீல் தொழிலில் நல்ல வருமானமும் வந்து