பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நீங்காத நினைவுகள்

அதில் மாவட்டக் காவல்துறைத் தலைவர் (D.S.P) ஏதோ ஒரு காரணம் காட்டி சட்டமன்ற உறுப்பினரைக் கட்டுப்படுத்தி உள்ளே தள்ளு" என்று எழுதிக் கையெழுத்திட்டிருந்தார். அது வட்ட ஆய்வாளர் கைக்குப் போக வேண்டியது. தவறியதுபோல் காட்டிக் காவல் துறையினர் இவர் கைக்குக் கிட்டச் செய்தனர் மாவட்டக் காவல் துறையினர் பெரும்பாலோர் தம் தலைவரின் அடாத செயல்களை, தான்தோன்றித்தனமான போக்கை, விரும்பவில்லை. ஆதலால்தான் அரங்கசாமி ரெட்டியாரைக் கருவியாகக் கொண்டு இவரை ஒழித்துக் கட்டவேண்டுமென்று கருதித் துண்டுத்தாளை இவர் கைக்குக் கிட்டும்படிச் செய்தனர்

மாலை சுமார் நாலரை.மணிக்கு டென்னிஸ் விளையாடப் போய்க் கொண்டிருந்த சமயத்தில்தான் இந்தக் காகிதத்துண்டு இவருக்குக் கிடைத்தது. உடனே மகிழ்வுந்தை இல்லத்திற்குத் திருப்பிக் கொண்டு வந்து மூன்று நாளைக்குத் தேவையான ஆடைகளை எடுத்துக் கொண்டு திருச்சி சென்று அன்றிரவே சென்னை செல்லும் இருப்பூர்தியில் ஏறி மறுநாள் சென்னை வந்தடைந்தார் காவல் துறைப் பெருந்தலைவரைச் (Inspector General) சந்தித்து விஷயத்தை விளக்கி புகார் விண்ணப்பம் தந்தார் சட்டமன்ற உறுப்பினரல்லவா? எந்தவிதத் தடையுமின்றி மாவட்டக் காவல்துறைத் தலைவரைத் தற்காலிகப் பதவி நீக்கம் செய்தார் பெருந்தலைவர் மாவட்டக் காவல்துறைத் தலைவர் இராவண வீழ்ச்சியை அடைந்தார். இராவண வீழ்ச்சியைக் கம்பநாடன்,

அரக்கர் பாவமும் அல்லவர்

இயற்றிய அறமும் துறக்க நல்லருள் துறந்தனன் துமொழி மடமான் இரக்க மின்மையும்’

என்று காரணம் காட்டி விளக்குவான் "சனகி என்னும் பெரு நஞ்சு உன்னைக் கண்ணாலே நோக்க போக்கியதே உயிர் நீயும்

3 கம்ப அயோத் மந்தரை சூழ்சசி - 78