பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

P. அரங்கசாமி ரெட்டியார் 47

களப்பட்டாயே" என்று இராவணன் மாண்ட செய்தியை நினைந்து மண்டோதரியும் புலம்புவாள் இந்த நிலையை மாவட்டக் காவல்துறைத் தலைவருடைய நிலைக்கு ஒப்பிடலாம். சீதையைத் தொடாமலேயே மடிந்தான் இராவணன் உதவி ஆய்வாளரின் துணைவிமேல் வைத்த ஆசையே அரங்கசாமிரெட்டியாரின் செயற்பாட்டாக நின்று மாவட்டக் காவலரின் பதவி நீக்கத்திற்குக் காரணமாயிற்று

நான் அப்பொழுது காரைக்குடியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். சென்னைப் பல்கலைக் கழகப் பேரவை உறுப்பினராகவும் (1953-56) இருந்தேன். இந்தப் பேரவைக் கூட்டத்திற்கு வந்தபோது அரங்கசாமி ரெட்டியாரைச் சட்டமன்ற உறுப்பினர் - பழைய உணவு விடுதியில் சந்தித்தேன் புதிய உணவு விடுதி அப்போது கட்டப் பெறவில்லை. அப்போது பதவி நீக்கம் செய்யப் பெற்ற மாவட்டக் காவல் துறைத் தலைவரும் அந்த விடுதிப் பக்கம் இன்னொருவருடன் யாரையோ பார்க்க அலைந்து கொண்டிருந்தார். அரங்கசாமி ரெட்டியாரும் நானும் தாழ்வாரத்தில் கைப்பிடிச் சுவர் அருகில் நின்று கொண்டிருந்தபோது காவல்துறைத் தலைவர் அரங்கசாமி ரெட்டியாரைத் தம் நண்பருக்குச் சுட்டிக் காட்டினார். ஆணவம் அடங்கியநிலையில் அவரைக் கண்டேன். இரக்கப்பட்டேன் "தன் வினை தன்னைச் சுடும்" என்ற உண்மைக்கு எடுத்துக்காட்டாகத் தென்பட்டார் காவல்துறை அதிகாரி

நினைவு - 12 : காரைக்குடியில் எனக்கு சைதைப் பயிற்சிக் கல்லூரியில் வகுப்புத் தோழராயிருந்த திரு V. சொக்கலிங்கம் பிள்ளை நகராண்மைக் கழக உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியாக இருந்தார். காரைக்குடி வந்தபிறகு மிகவும் நெருங்கிப் பழகிய நண்பர்களுள் இவர் முக்கியமானவர் சில ஆண்டுகள் கூட அவரது இல் வாழ்க்கை இனிது நடைபெறவில்லை தம்முடைய சுகதுக்கங்களை என்னிடம் மட்டிலுமே கலந்து பரிமாறிக் கொள்வார் பன்னிரெண்டு ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்த இவர்தம்

4 யுத்த - இராவணன் வதை - 220