பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V. சொக்கலிங்கம் பிள்ளை 71

தலைவரை எப்படி மீற முடியும்? ஆணையருக்குக் கிடைத்த சன்மானம் சங்கப்பாடல்களில் அடங்கிய இறைச்சிப் பொருள் போல் இருந்தது என்பது சொல்லாமல் போதரும்

அந்த ஆண்டு மாவட்டக் கல்வி அதிகாரி பள்ளித் தணிக்கையின்போது இதனைக் கண்டறிந்தார். ஆய்வு அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டதோடன்றி தலைமையாசிரியர் சுற்றறிக்கையைக் கவனியாமலோ அல்லது வேண்டுமென்றோ வாங்கியமைக்காக அவர்தம் பொறுப்பில் பன்னிரெண்டாயிரம் ரூபாய் பள்ளிக்கு தண்டக் கட்டணமாகக் (Surcharge) கட்டவேண்டும் என்ற ஆணை பிறப்பித்தார். இந்த ஆணையின் நகல்களைக் நகராண்மைக் கழக ஆணையர், கல்வி இயக்குநர், மண்டலப் பள்ளிக் கல்வி ஆய்வாளர் இவர்கட்கெல்லாம் அனுப்பி வைத்து விட்டார். சொக்கலிங்கம் பிள்ளையிடத்தில் நான் இருந்திருந்தால் கம்பெனிக்குப் பணம் தருமாறு நகராண்மைக் கழக ஆணையர் எழுதிய கடிதத்திற்கு மறுமொழி தரும்வகையில் அரசு சுற்றறிக்கைக் கடிதத்திற்கு மாறாக வேறு கம்பெனியார் உற்பத்தி செய்ததை வாங்கியது தவறு என்றும், அவர் ஆணைப்படிக் கம்பெனிக்குப் பணம் அனுப்புவது தம் பொறுப்பல்ல என்றும், ஆணைக்குக் கீழ்ப்படிவது தம் கடமையாதலால் பணம் அனுப்புவதாகவும் பின்னர் தணிக்கையின் போது மாவட்டக் கல்வியதிகாரி இந்தத் தவற்றைக் கண்டறிந்து தம்மைப் பொறுப்பாளியாக்கினால் அது தம்மைக் கட்டுப்படுத்தாது என்றும் சுட்டிக் காட்டி ஆணையருக்கு மரியாதை தவறாமல் கடிதம் எழுதியிருப்பேன். இதன் நகல்களை மாவட்டக் கல்வியதிகாரி, மண்டலப் பள்ளிக் கல்வி ஆய்வாளர், கல்வி இயக்குநர் இவர்கட்கெல்லாம் அனுப்பி வைத்திருப்பேன். பின்னர் வரும் குற்றச்சாட்டிற்கு இக்கடிதம் தற்காப்பு அரணாகவும் அமையும். சொக்கலிங்கம் பிள்ளை ஒரு வெகுளி: துணிவு இல்லாதவர். ஆதலால் அவ்வாறு எழுதவில்லை.

மாவட்டக் கல்வியதிகாரி பன்னிரெண்டாயிரம் பள்ளிக்குச்

செலுத்துமாறு எழுதிய கடிதத்தை எடுத்துக் கொண்டு என்னிடம் வந்தார். நான் மேற்குறிப்பிட்டவாறு கடிதம் எழுதியிருந்தால் அஃது