பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

திரு. P. முத்துவேங்காடசல துரை

திருச்சி மாவட்டத்தில் துறையூர் புகழ் வாய்ந்த ஊர் பேரூர். இந்த ஊர் பெருநிலக் கிழவர் பிரசன்ன வேங்கடாசல துரை என்பவர் கல்வியறிவு இல்லாதவர் அரண்மனையைவிட்டு வெளியில் வராதவர். இவர்தம் மூன்றாவது திருக்குமாரர்தான் பிரசன்ன முத்து வேங்கடாசல துரை என்பவர் இரண்டாவது குமாரர் பிரசன்ன விசய வேங்கடாசல துரை என்பவர். முதல் குமாரர் பெயர் தெரியவில்லை ஒரு மகனை விட்டு இளமையிலேயே திருநாடு அலங்கரித்து விட்டார். பெருநிலக் கிழவர் தம் துணைவியாரையும் மக்களையும் பேரனையும் அரண்மனையைவிட்டு விரட்டி விட்டு அரண்மனையில் தனிக்கட்டையாகக் கிடந்தார். ஏன் அப்படிக் கிடந்தார் என்பதற்கு துறையூருக்குக் கிழக்கேயுள்ள பெருமாள் மலையில் எழுந்தருளியிருக்கும் பிரசன்ன வேங்கடாசலபதிக்கே வெளிச்சம் மனைவியாரும் பிள்ளைகளும், பேரனும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பிழைப்புத் தேவைக்காக (Maintenance) ஒவ்வொருவரும் திங்கள் ஒன்றுக்கு ரூ. 250/- வீதம் தொகை பெற்று வாழ்ந்து வந்தனர். பேரனுக்குச் சிற்றப்பன்மார் இருவரும் பாட்டியும் உதவியாக இருந்தனர். பேரன் பத்தாவது வகுப்புகூட தாண்டவில்லை.

நினைவு - 1 : திருமகளின் கடைக்கண் நோக்கு இருக்குமிடங்களில் கலைமகளின் கடைக்கண் நோக்கு பெரும்பாலும் இருப்பதில்லை பிழைப்புத் தேவையாக ஒவ்வொருவரும் ரூ. 250/பெற்றநிலையில் கலைமகளின் கடைக்கண் நோக்கினால் விசய வேங்கடாசல துரையும், முத்து வேங்கடாசலதுரையும் உயர்கல்வி பெற்று, இளங்கலை பட்டமும் பெற்றனர். சட்டம் பயின்று