பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

P. முத்துவேங்கடாசல துரை 81

சந்தித்து எனக்குப் படிப்புதவிக் கட்டணம் பெறுவதற்குரிய எல்லாத் தகுதிகளும் இருப்பதாகச் சான்றிதழ் ஒன்றையும், அக்காலத்தில் சென்னையில் மிகவும் புகழ் வாய்ந்த வழக்குரைஞராக இருந்த (மயிலை அப்பர்சாமிக் கோயில் தெரு திரு. E.V. சுந்தரரெட்டி என்பவருக்கு ஒரு பரிந்துரைக் கடிதமும் பெற்றேன் கல்லூரியில் சேர்ந்ததும் இந்தப் பரிந்துரைகளோடு ரெட்டி ஜன சங்கத்திற்கு முதல்வர் சான்றிதழுடன் விண்ணப்பம் அனுப்பினேன். இரண்டு திங்களில் ஆண்டொன்றுக்கு ரூ. 100/- வழங்குவதாகவும், அது திங்களொன்றுக்குப் பத்து ரூபா வீதம் வழங்கப்படும் என்றும், இரண்டாவது ஆண்டில் வேண்டுகோளைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் ரெட்டி ஜனசங்கத்திலிருந்து கடிதம் வந்தது அக்காலத்தில் இஃது எனக்குப் பேருதவியாக இருந்தது

அந்தக் காலத்தில் கல்லூரியில் ஆண்டுக் கட்டணம் ரூ, 96 = மூன்று பருவகாலத்தில் கட்ட வேண்டியது தான். இதைத்தான் ரெட்டி ஜன சங்கம் வழங்கி வந்தது. சங்கத்தின் மூலம் மாதம் ரூ. 101 = வீதம் பத்து மாதத்திற்கு வழங்கி வந்தது. இளங்கலை வகுப்பில் (B.Sc) பயின்று வந்தபோது இரண்டாண்டுகட்கு இத்தொகை பெற்றேன் இக்கால நிலையை வைத்துப் பார்க்கும்போது இத்தொகை மிகக் குறைவாகத் தோன்றினாலும், அக்காலத்தில் இது பேருதவியாக இருந்தது உணவு விடுதியில் உண்போருக்கு இத்தொகை இரண்டு வேளை உணவுக்குப் போதுமானதாக இருந்தது மாதா மாதம் முதல். வாரத்தில் பணவிடை மூலம் ரூ 9-14-0 வரும் இரண்டனா அஞ்சல் சேவகனுக்குத் தருவேன். ரூ, 9-12-0 என் செலவுக்கு ஆகும்

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞானத்தின் மாணப் பெரிது என்ற குறளையும் "அக் கால நோக்குவதல்லது பொருள் நோக்கலாகாக தென்பதாம்" என்ற பரிமேலழகர் உரையையும்

சிந்தித்துப் பார்க்கின்றேன். இதற்குப் புருஷகாரமாக நின்று உதவிய முத்து வேங்கடாசல துரையையும் நன்றியுடன் நினைவுகூர்கின்றேன்

1 குறள 102

6