பக்கம்:நீங்காத நினைவுகள்-1.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

P. முத்துவேங்கடாசல துரை 83

என்றும், ஊமைத்துரை கருமை நிறமுடையவராதலால் "கருத்தய்யா" என்றும் வழங்கி வந்தனர். என்று படித்ததாக நினைவு. இந்த இரு துரைமார்களும் சிவப்பாகவும் கறுப்பாகவும் இருந்தனர். பாஞ்சாலங் குறிச்சி வீரர்களுடன் ஒப்பிடத் தக்கவர்களாக அமைந்தனர். பாஞ்சாலங்குறிச்சியைச் சார்ந்த இருவரும் மாவீரர்கள். மானமே உயிரினும் பெரிது என்ற கொள்கையையுடையவர்கள் ஆனால் எனக்குத் தலைவர்களாக அமைந்த பெருநிலக் கிழவரின் மக்கள் இருவரும் பெருங்கோழைகள் எந்த முன்னேற்றப் பாதையிலும் துணிவாக இறங்கிச் செயற்பட அஞ்சுபவர்கள். ஆயினும் இவர்கள் இருவரும் மானம் காத்து வாழ்ந்தவர்கள் நேர்மை தவறாதும் வாழ்ந்தவர்கள்

மூத்தவர் பள்ளிக்கு ஒரு நாளும் வந்ததில்லை. அவருக்குப் பள்ளியைப்பற்றி எதுவும் தெரியாது உலகியலும் தெரியாது" என்பது என் கணிப்பு பலரது அநுபவமும் இந்த முடிவுதான் இளையவர் முத்து வேங்கடாசல துரை கல்வித் துறையில் ஊக்கமும் ஆர்வமும் இல்லாதவராக இருந்தாலும், சட்ட நுணுக்கம் அறியாதவராக இருந்தாலும், உலகியல் அறிந்த சதுரர் இல்லாவிட்டால் பள்ளியை ஒரு வாணிகம்போல் ஒரு தொழில்போல் - நடத்த முடியுமா? வெல்லப் பிள்ளையார் ஒன்றைச் செய்தானாம் ஒருவன் அதன் நைவேத்தியத்திற்குச் செலவு செய்ய அவனுக்கு மனம் இல்லை. ஆனால் அவனது "கூர்த்த மதியில் ஓர் அற்புதமான எண்ணம் உதித்தது பிள்ளையார் வெல்லத்தால் ஆனவர் என்பதை உணர்ந்த அவன் அதன் தலையிலேயே கொஞ்சம் வெல்லத்தைக் கிள்ளி எடுத்து அதனையே நைவேத்தியப் பொருளாக அந்தப் பிள்ளையாருக்கு வைத்துப் படைத்தானாம்! இந்த வெல்லப் பிள்ளையார் செய்தவனைப் போன்றவர் முத்து வேங்கடாசலம் துரை பள்ளியை நடத்திய விதமும் அவன் நைவேத்தியம் செய்த கதையைப் போன்றதுதான். இப்படிப் பள்ளி நிர்வாகம் அற்புதமாக - நிர்வாகத்தினரின் கையைக் கடிக்காமல் - நடைபெற்றது. ஆசிரியர்களின் உழைப்பின்மீது கட்டடங்கள் கட்டப் பெற்றன: எஞ்சியிருந்த பணம் கற்பனைச் செலவுக்காகத் தயாரிக்கப் பெற்ற