பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் D. ஜகந்நாத ரெட்டி 283 பொழுதொருவண்ணமுமாக மேம்படுகின்றது. கல்லூரி வசதிகட்காகவும், மருத்துவமனை வசதிகட்காகவும் பலகட்டடங்களை எழுப்பியதனால் ஒரு விசுவகர்மா எனப் போற்றிப் பெற்றார். பாண்டி ஜவஹர்லால் மருத்துவக் கல்லூரி - ஆய்வு நிறுவனத்தின் (JIPMER) வளர்ச்சி வீறுகொண்டெழுந்தது. அதன் இருப்பை நாடறியச் செய்தது டாக்டர் ஜகந்நாத ரெட்டியின் பெரும்பணியாகும். அன்பர் பணிசெய்யளனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானேவந் தெய்தும் பராபர்மே' என்ற தாயுமான அடிகளின் பேருண்மையை அநுபவமாகக் கண்டவர் டாக்டர் ரெட்டி செயல்திறம் மிக்க இவருடைய சுறுசுறுப்பையும் "மெய்வருத்த பாராதும், பசிநோக்காதும் கண் துஞ்சாதும் பணியாற்றும் பாங்கையும் அறிந்த ஆந்திர அரசு இவரைத் திருவேங்கடம் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக்கியது. டாக்டர் வாமனராவுக்குப் பிறகு இவர் திரிவிக்கிரமாவதாரம்போல் திருப்பதி வந்து சேர்ந்தார். நினைவு 4 : டாக்டர் ரெட்டி பதவியேற்ற ஒன்றிரண்டு வாரங்களில் அக்டோபர் - 1969) தமிழ் வளர்ச்சிக்கென நான் தமிழக அரசிடம் மானியம் பெறுவதற்கென்று மேற்கொண்ட "பகீரதப் பிரயத்தனம்" பழமாயிற்று. ஆண்டிற்குப் பத்தாயிரம் வீதம் ஐந்தாண்டுகட்கு மானியம் வழங்குவதென்ற ஆணையைத் தமிழக அரசு பிறப்பித்தது. டாக்டர் ஜகந்நாத ரெட்டிக்கு இது பெருமகிழ்ச்சி. தந்திருக்க வேண்டும் என்பதைப் பின்னர் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளால் ஊகிக்க முடிந்தது. எந்தத் துணைவேந்தர் புதிதாக வந்தாலும் ஒவ்வொரு துறையிலும் தமிழ்த் துறையைத் தவிர சங்கக் கூட்டத்தைத் தொடங்கி வைக்கவோ அல்லது அதன் நிறைவுக் கூட்டத்தை முடிக்கவோ அழைப்புகள் இருக்கும். பல்கலைக் கழக வளாகத்தில் 7 தா.பா. பராபரம் - 155