பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 - நீங்காத நினைவுகள் துணைவேந்தர் திருமாளிகை அகன்ற பரப்புள்ள இடத்தில் மாந்தோப்புகளுக்கிடையே அமைந்துள்ளது. அதற்குள் அங்குமிங்குமாகப் பல கற்சிலைகள் கவனிப்பாரற்றுக் கிடந்தன: அவற்றுள் சில குறையுறுருப்புகளுடனும் காட்சியளித்தன. இவற்றை ஒன்று திரட்டி ஓரிடத்தில் கலைக்கூடமாக்கக் கருதினார். திருப்பதி - - சித்துர் நெடுஞ்சாலையிலிருந்து பல்கலைக்கழக வளாகத்தில் நூலகத்திற்குச் செல்லும் குறுஞ்சாலையின் இருபுறங்களிலும் நேருக்கு நேராக அமையுமாறு நடச் செய்து அவற்றைச் சுற்றி அழகான சிமிட்டியாலான மேடையையும் நிறுவச் செய்தார். அறிவுக் கலைக்கூடமாகிய நூலகத்திற்குச் செல்வோர் கலையுணர்வுடன் செல்வதற்கு இச்சிலைகள் வாய்ப்பாக அமைந்து அகத்தெழுச்சியை உண்டாக்குவனவாயிருந்தன. பார்ப்பதற்கு இச்சாலை ஓர் அரும்பொருள் காட்சியகக் களையை நல்கியது. இன்று அவை அகற்றப் பெற்று தேவஸ்தானத்தின் அருங்கலைக் காட்சியகத்தைப் புகலிடமாகக் கொண்டுவிட்டன. - இவர் காலத்தில் நடைபெற்ற பல்கலைக் கழக வளர்ச்சிப் பணிகளை கட்டட வளர்ச்சி, துறைகளின் தோற்ற வளர்ச்சி என்று இருபகுதிகளாகப் பிரித்து நினைவுகூரலாம். ஆயினும் இவை இரண்டும் இணைந்த நிலையில்தான் நடைபெற்றன என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும் கிடைப்படவடிவில் கிடந்த முக்கிய மூன்று கட்டடங்கள் உருப்பெற்றன. தொடர்ந்து ஏனையவை எழும்பின. நினைவு 6 : கட்டட வளர்ச்சிப் பணிகள் என்றுமில்லாத அசுர வேகத்தில் நடைபெற்றன. முதல் துணைவேந்தர் பேராசிரியர் - கோவிந்தராஜுலு நாயுடு காலத்தில் திட்டமிட்ப் பெற்றுக் கிடைப்படிவ. வடிவில் கிடந்த திட்டங்கள் பல்வேறு காரணங்களினால் செயற்படாமற் கிடந்தவற்றையெல்லாம் செயற்படச் செய்தார். புதிய திட்டங்களையும் தீட்டி அவற்றையும் முற்றுப்பெறச் செய்தார். முன்னைய திட்டங்களில் முக்கியமான மூன்று செயற்பட்டன. t பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம்: பதிவாளர். துணை வேந்தர் அறைகள், தேர்வாணயர் அலுவலகம், பொறியாளர்