பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 நீங்காத நினைவுகள் தனிப்பட்டோரிடமிருந்தும், சில நிறுவனங்களிலிருந்தும் நன்கொடைகள் வந்து குவிந்தன. இவையெல்லாம் தீக்கடவுள் உணவாகக் கொண்ட பொருள்கள் வாங்கப் போதா. இறையருளால் கட்டடத்திற்கு அதிகச் சேதம் இல்லை. பொறியாளர்கள் இதனைச் சோதித்து அறிந்தனர். ஆறு திங்களில் துணைவேந்தர் மயன்போல் செயற்பட்டார். மீண்டும் கலையரங்கம் மறுபிறவி எடுத்தது. நிதிபோதாததால் புதிய பிறவி இரண்டாந்தரமாக அமைந்தது. இதுவும் இறைவனின் திருக்குறிப்பே என்று துணைவேந்தரோடு சேர்ந்து பல்கலைக்கழகப் பணியாளர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். இதன் திறப்புவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஆந்திர அரசின் மாண்புமிகு கல்வியமைச்சர் திரு M.V.கிருஷ்ணராவ் திறந்து வைத்தார். இவர் இப்போது இல்லை. இறைவன் திருவடியை அடைந்து விட்டார். இவர் டாக்டர் ஜகந்நாத ரெட்டியின் அரிய பணிகளைக் கண்டு உள்ளுர மகிழ்ந்தவர். தம்முடைய பேச்சில் இக்கலையரங்கம் "ஜகந்நாதரெட்டி கலையரங்கம்" என்ற பெயரில் வழங்கினால் சிறப்பாக இருக்கும். நன்றியுடன் நினைவுகூரத் தக்கதாகவு இருக்கும் என்று குறிப்பிட்டார். தம் காலத்தில் தாமே இத்திருப்பெயரைச் சூட்டிக்கொள்ள விரும்பவில்லை" டாக்டர் ரெட்டி இவருக்குப் பின்னர் வந்த துணைவேந்தர்கள் இவர் பணியை நன்றியுடன் போற்றியிருக்க வேண்டும் செய்யவில்லை. ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவரின் சிந்தையிலாவது இந்த நல்லெண்ணம் தோன்றாதிருந்தது மிகவும் வருந்தத்தக்கது. இதனைச் "சீநிவாசபவனம்" எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தது நிர்வாகம் என்ன. நன்றி கெட்ட உலகம் என்று சில வயது முதிர்ந்த பேராசிரியர்கள் முணுமுணுத்து வருந்தினர். 13 இன்றைய அரசியல்வாதிகள் தாம் பதவியிலிருக்கும்போதே தம்பெயர்களைப் பலநிறுவனங்களின் பெயர்களாகச் சூட்டி மகிழ்வது நடைமுறை அரசியலாகிவிட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் சர் A.I. முதலியார் துணைவேந்தர் சிலை அவர் பதவியிலிருந்தபோதே நிறுவப்பெற்றது. -