பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் D. ஜகந்நாத ரெட்டி 307 பல்கலைக்கழக வாழ்க்கையையே ஒரு தவவாழ்க்கையாகக் கொண்டு செயற்பட்டதால் இத்தொல்லைகளையெல்லாம் தாங்குவதற்கேற்ற ஆற்றலை நல்கி உய்வித்தான். துன்பப்பட்டது என் நுகர்வினையால் (பிராரர்த்தத்தால் வந்தது என்ற உண்மையையும் அவனே என்னை உணரச் செய்ததால் என்னிடம் தாக்குப் பிடிக்கும் ஆற்றலும் வளர்வதற்கு அதுவே காரணமாயிற்று. இதனால் பதவி உயர்வு பிரச்சினை என்னை ஒன்றும் செய்யவில்லை. ஆனால் வேறொரு துன்பத்தை அநுபவிக்க நேர்ந்தது. டாக்டர் மு.வ. திருநாடு அலங்கரித்தார் டிசம்பர் 10, 1974), என் உடல்நிலை சிறிது கெட்டிருந்தும் 10-ஆம் நாள் நிகழ்ச்கிக்குச் சென்று வந்தேன். உணவு கொள்ள முடியவில்லை. மோர் சோறு, பாயசம், கத்தரிக்காய் கூட்டு மட்டிலும் உண்டேன். கூட்டு சுவையாக இருந்ததால் சற்று அதிகமாகவே அதனை உண்டேன். ஊர் திரும்பியதும் கடுமையான வயிற்றுப்போக்கு நிற்கவில்லை. மு.வ.வைத் தொடர்ந்து வைகுண்டம் சென்றுவிடுவதுபோன்ற நம்பிக்கையும் தோன்றிவிட்டது. பூச்சி மருந்து அடித்ததால் எற்பட்டதன் விளைவு என்பது பின்னர் தெரிந்தது. த்மிழ்த்துறை மாணவர்கள் நன்கு கவனித்துக் கொண்டனர். பல பேராசிரியர்கள் வந்து பார்த்தனர்; அடிக்கடி வந்து சென்றனர். திருமதி இலக்குமி ஜகந்நாத ரெட்டி இருமுறை பழங்களுடன் வந்து பார்த்து துணிவூட்டிச் சென்றார். படுக்கையாகக் கிடந்த டாக்டர் நாராயணராவைப் பார்க்கச் சென்ற டாக்டர் ரெட்டி என்னைப் பார்க்க வரவில்லை. "இவன் ஒழிந்தால் டாக்டர் தாமோதரனுக்குப் போட்டி ஒழியும் பேராசிரியராக்கி விடலாம்" என்று. நினைத்தாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. டாக்டர் ரெட்டி வரவேண்டும் என நான் நினைக்கவில்லை. அவரது பாரபட்சத்தைக் காட்டவே இதனை எடுத்துக் காட்டினேன். எல்லாவற்றையும் இறைவனுக்குவிட்டு விட்ட என்னைப் பார்க்க பார் வந்தால் என்ன? வாராது போனால் என்ன? இந்த நிகழ்ச்சிக்குச் சற்று முன்னேரோ பின்னரோ டாக்டர் ரெட்டியின் 6-ஆம் பிறந்த ஆண்டு தொடங்கியது. இதனையொட்டி