பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் D. ஜகந்நாத ரெட்டி 309 வழங்கப்பெற்றது. மற்றொருவரும் தகுதியுடையவரே. மரபுப்படி பதற்றமில்லாமல் இயல்பாக நடைபெற வேண்டியது இது. அரசியல் வாதிகள் கூட அசுரவேகத்தில் இத்தகைய நீதிக்குப் புறம்பான செயலி ல் இறங்கியிருக்க மாட்டார்கள் என்பது பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முதிய பேராசிரியர்களின் கருத்து. பல்கலைக்கழக நிர்வாகத்தில் மக்களுக்கு நம்பிக்கை இல்லாத நிலைமையை அடாத பழியை ஏற்படுத்தி விட்டார் துணைவேந்தர். இந்த அதிர்ச்சி தரும் நடவடிக்கையில் காரியம் வரம்பு மீறி போய்விட்டது என்று கண்ட ரிட் விண்ணப்பம் போட்ட டாக்டர் இலட்சுமணன் ரிட் மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டது சோகநாடகக் (Melodrama)களை தட்டும்படி செய்துவிட்டது. பல்கலைக்கழக வளாகத்திலேயே இலட்சுமணன் கோழையாகக் காட்சி அளித்தார். ஆ. இத்துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றிய டாக்டர் M. இராதாகிருட்டிணன் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். இவர் துணைப் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். தனிச் சிறப்புக்கூறு (Specialization) பற்றி ஏதோ ஐயத்தை எழுப்பிக் கொண்டு துறைத் தலைவர் பீம்சேனாச்சாரின் கைங்கரியம் இது இவருக்கு பேட்டியே மறுக்கப்பெற்றது. ஆனால் ஒன்றிரண்டு ஆண்டுக்குள் சென்னைப் பல்கலைக்கழகக் கோவைமையத்தில் இவர் விரிவுரையாளர் பதவியிலிருந்து நேராக பேராசிரியர் பதவியில் நியமனம் பெற்றார். பேராசிரியர் ஊதியத் திட்டத்திலும் இரண்டு உயர்வுப் படிகளை (increments) பெற்றது எல்லோரையும் வியக்க வைத்தது. தாமரைச் செல்வர் நெது. சுந்தரவடிவேலு காலத்தில் இது நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 2 தத்துவத்துறை இத்துறைக்குப் பேராசிரியர் பதவிக்கு ஏற்பட்ட நியமனக் குழுவில் உளவியல் பேராசிரியர் ஒருவர் உறுப்பினராக அமர்ந்துவிட்டார். இது தவறாக நிகழ்ந்துவிட்டது. பேட்டியும் நிகழ்ந்து விட்டது. இத்துறையில் துணைப் பேராசிரியராக இருந்த டாக்டர் திருமதி சரசுவதி சென்ன கேசவன் என்பாரும் ஒரு விண்ணப்பதாரர். குழுவில் உளவியல் பேராசிரியரைக் கண்ட